வடகரை வேலனின் - காத்திருந்த காதலி - 1
பரிசல்காரனின் - காத்திருந்த காதலி - 2
வெய்யிலானின் - காத்திருந்த காதலி - 3
கிரியின் - காத்திருந்த காதலி - 4
ஜெகதீசனின் - காத்திருந்த காதலி - 5
ஃஃஃஃஃஃஃஃ
எங்கெங்கோ சுற்றித் திரிந்த கதையயை, ஒரு விபத்தில் கார்த்திக்கின் தாய், தந்தையயை சாகடித்து, ஒரு அருமையான திரைக்கதை வித்தகர் என்று நிருபித்திருக்கும் ஜெகதீசனுக்கு வாழ்த்துக்கள்.
ஃஃஃஃஃஃஃஃ
கெளரி மருத்துவமனையை விட்டு வெளியேறிய பின்..
சொல்டா... சங்கருக்கு எப்படி இருக்கு? ரெம்ப கிரிட்டிக்கலா? எப்ப நினைவு திரும்பும்?ம்ம்ம்...உள்ள வாடா சொல்றேன்....
இனி........
வேலை செய்வதைப் போல் நடித்துக் கொண்டியிருந்த, செவிலியயை, உள்ளே நுழையும் போதே, பார்வையில் வெளியேறச் சொல்லிக் கொண்டே தனது இருக்கையில் அமர்ந்தார், இருதயராஜ்.
"உட்காருடா" என்று கெளரியின் தந்தையான ராமச்சந்திரனை பணித்தார் இருதயராஜ்.
சொல்ல வந்ததை பட்டென்று நோயாளிகளிடமே சொல்லிவிடும், இருதயராஜ், ராமசந்திரனிடம் சொல்லத் தயங்கினார். அது அவருடைய மகள் சம்பந்தப்பட்டது என்றக் காரணம் மட்டுமல்லாமல், தனது இயலாமை என்பதாலும் தயங்கினார்.
ஒருவாறாக தனது மனதை நிலைநிறுத்தி, ராமச்சந்திரனிடம் சொல்ல ஆரம்பித்தார்..இருதயராஜ்.
கேட்க கேட்க, அப்படியே உறைந்தப் போனார் ராமச்சந்திரன்.
ஃஃஃஃஃஃஃ
சங்கரின் நிலைக்குறித்து தனது தந்தையாரிடம் சொல்லலாம் என்று அலுவலகம் வந்த கெளரி தந்தையார், மருத்துவமணை போயிருப்பதை அறிந்து, தனது வண்டியயை மீண்டும் மருத்துவமணைக்கு திருப்பினாள்.
மருத்துவமணைக்கு போகும் வழியில் எல்லாம்,அவளுக்கு பல நினைவுகள்..ஆனால், அந்த நினைவுகளின் ஊடே, அவளுக்கு இடைவிடாது ஒரு சந்தேகம் ஒலித்துக் கொண்டே வந்தது. சங்கரின் உடல் நிலைக்குறித்து, உறுதியான ஒரு தகவல் வரும் வரை அவள் நிம்மதியயை இழந்து தவிக்கப் போவது உறுதி என்பதை அவளின் அமைதியின்மை பறை சாட்டியது.
மருத்துவமணையின் உள் நுழையும் போது, "உயிர் நண்பன் மருத்துவமணையில் இருக்கும் பொழுது கார்த்திக் ஏன் இப்படி திடிரென்று போய் விட்டான்" என்று யோசித்துக் கொண்டே வந்தாள்.
ஃஃஃஃஃஃஃஃ
"அப்படின்னா இனிமே..." என்று ராமச்சந்திரன் இழுக்கவும், கெளரி, இருதயராஜ் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
ஏதோ தீவிரமான உரையாடல் நடந்துக்கொண்டியிருப்பதை உணர்ந்த கெளரி, சங்கர் குறிந்து இருக்கும்மோ என்று பதட்டத்துடன் "என்னப்பா இனிமே ,....? என்ன இனிமே...? சொல்லுங்கப்பா, சங்கருக்கு என்னப்பா ஆச்சு....என் கிட்டே மறைக்காதீங்கப்பா" என்று தந்தையின் சட்டையயை உலுக்கத் தொடங்கினாள்.
மகளை எளிதில் சமாதானம் செய்ய முடியாது என்பதை உணர்ந்த ராமச்சந்திரன், "இல்லம்மா, இது சங்கர் பற்றியது இல்லையம்மா..."..
எனக்கு இரத்தப் பரிசோதனை எடுக்கச் சொல்லியிருந்தாங்க...எனக்கு சர்க்கரை இருக்காம்மா, அதனாலே, இனிமே இனிப்பு சாப்பிடக்ககூடாதா என்று கேட்க இருந்தேன்..அதைப் போய் நீ தவறா நினைச்சிட்டியே.. என்று மிக நிதானமாக ராமச்சந்திரன் கூறினார்.
மகுடிக்கு மயங்கும் பாம்பு போல், தந்தையின் சொல்லைக் கேட்டு கெளரி, "ஓ அப்படியாப்பா, காமாலைக் கண்...கண்டதெல்லாம் மஞ்சாளாகத் தெரிகிறது." என்று தன்னை நொந்தபடி, தந்தையின் நலன் விசாரிக்க மறந்தேனே என்று மீண்டும் நொந்துக் கொண்டாள்.
"அப்பா, எப்படியப்பா உங்களுக்கு சர்க்கரை வந்தது..இனிமே உங்களுக்கு தேயிலை, வடிகொட்டை நீரில் இனிப்பு போடவே மாட்டேனப்பா" என்று மிரட்டினாள்.
"சரியம்மா..உன் விருப்படியே ஆகட்டும்" என்று சொல்ல வந்து விருப்பப்படியே என்றுச் சொல்லும் போது ராமச்சந்திரனுக்கு குரல் கமறியது. அதற்குள்..
"சங்கரை ஒரு முறை நான் வெளியே இருந்து பார்க்கட்டுமா" என்று இருதயராஜை நோக்கி கேட்டாள் கெளரி.
இருதயராஜிற்கு இருதயமே நின்று விடும் போல் இருந்தது
ஃஃஃஃஃஃஃஃஃ.
இரயில் மேல் படுக்கையில் கண்களை மூடி ஆழ்ந்து உறக்கத்திலிருந்தான் கார்த்திக்.
மருத்துவமணையில் கெளரியயை சந்தித்ததை நினைவில் நிறூத்தி, அதில் கெளரி என்ன உடை உடுத்தியிருந்தாள் என்று யோசித்துக் கொண்டியிருந்தான்.
நண்பனின் காதலியயை நினைக்கிறாயே ...?என்று அவனுடைய மனசாட்சி ஈனமான குரலில் கேட்டப் பொழுது, அவன் காதலிக்கும் முன்பிருந்தே நான் காதலிக்கிறேன்..அவன் தான் என்னுடைய காதலை கவர்ந்துவிட்டான்.
சங்கர் உன்னை என்ன செய்தால் தகும்...என்று கனவில் உறுமினான்
அது தான் செஞ்சிட்டியே...இனிமே என்ன செய்யனும் என்று மீண்டும் மெதுவான குரலில் ஒலித்தது அவனுடைய மனசாட்சி...
இல்லை இல்லை..அது நான் வேண்டுமென்றே செய்யவில்லை....என்று தூக்கத்தில் அரற்றினான்..கார்த்திக்...
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
கண்களைத் திறக்க முயற்சி செய்தான் சங்கர்....யாரோ கைகளை கண்கள் மீது அழுத்தி மூடியதுப் போல் உணர்ந்தான்.
கை கால்களை அசைக்க முயற்சி செய்தான்...ஆனால் முடியவில்லை..
என்ன நடந்தது....என்று நினைவுக்கூற முயன்றான்....நெற்றியில் சம்மட்டியால் யாரோ அடிப்பதுப் போல் வலித்தது..
"கார்த்திக்....உன்னை கொல்லாமல் விட மாட்டேன்...."
ஃஃஃஃஃஃஃஃஃஃ
(காத்திருந்த காதலி யாருக்கு காத்திருந்தாள்...என்ற கேள்விக்கு விடை தெரிய யாரை அழைப்பது.....என்று யோசிக்கும் பொழுது..இந்தக் கதைக்கு பின்னுட்டபவர்களே ஆசிரியராக ஆகிக் கொண்டியிருப்பதை எண்ணிப் பார்த்து, நம்ம முத்தக்காவை அழைக்கிறேன்.........)
கதைக்கு என்னால் ஆன குழப்பங்களை சேர்த்துவிட்டியிருக்கேன்...கூடுதலாக ஒரே ஒரு விதி..குறைந்தப் பட்சம் 16 ஆசிரியர்கள் (பாகம்) ஆனப் பிறகே முற்றும் போட வேண்டும்.
ஃஃஃஃஃஃஃஃஃஃ
கதையயை மருத்துவமணை விட்டு டெல்லிக்கு இழுத்துச் செல்வாரா முத்தக்கா..வெகு விரைவில் இங்கே வெளியாகும்...காத்திருந்து படியுங்கள்..










