மேற்படிப்பு படிக்கலாம் என்று முடிவெடுத்து எம்.பி.ஏ படிக்கலாம் என்று அதற்கு தயாராக்கும் வகுப்பில் சேர்ந்தேன். வகுப்பிலே நான் சேரும் பொழுது வகுப்பு ஆரம்பித்து ஏற்கனவே சில நாட்கள் ஆகிவிட்டியிருந்தன. நான் போய் அமரும் போது வகுப்பு ஏற்கனவே ஆரம்பித்து நடந்துக் கொண்டிருந்தது.
சரி..கூடப்படிக்கும் நபர்களில் ஒருவரைப் பிடித்து விட்டுப் போன பாடங்களை கற்றுக் கொள்ளலாம் என்று நான் நினைத்துக் கொண்டியிருக்கும் போது, தான் அவன் வந்தான். அவனைப் பார்த்தாலே தெரிந்தது அவனும் தமிழன் என்று. இந்தப் பாழாய்ப் போன பெங்களூரிலே, தமிழனைக் கண்டாலே நமக்கு உடனே பேசி ஆகனும்மே.அவனும் அதுக்கு ஏத்தா மாதிரி, வந்தான்..கையயைக் கொடுத்தான். "ராஜ கோபால்" என்று அறிமுகப்படுதிக்க் கொண்டான். நானும் உடனே ராஜு என்று கைக் கொடுத்தேன். அந்த வகுப்பிலே நாங்கள் மட்டுமே தமிழர்கள். மற்றவர்கள் கர்நாடகம், ஆந்திரா, பெங்கால் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
கணித வகுப்பாசிரியர் ரொம்ப நல்லா பாடம் நடத்திக் கொண்டிருந்தார். எனக்குத் தான் எதுவும் புரியவில்லை. "ரொம்ப நாளாகிடுச்சு...டச்சு விட்டுப் போச்சு", என்றேன். "ஆமாம், எனக்குக் கூட எதுவும் சரியாக விளங்கவில்லை." என்று ஆமோதித்தான். வகுப்பு முடிவடைந்தது. அப்படியே பரஸ்பரம் அலுவலக பின் புலன்களை பரிமாறிக் கொண்டோம். அடுத்த வகுப்பு ஆங்கிலம் என்று கையேடு சொன்னது.
ஆங்கில ஆசிரியயை வந்தார். வந்தவுடனே, அவர் கற்றுத் தரும் பாடம் அன்று தான் ஆரம்பம் போலிருக்கிறது. வந்தவுடன் அறிமுகப்படலம் ஆரம்பித்தது. அவர் " என் பெயர் லலிதா மகாதேவன்" என்று சொல்லிவிட்டு.." உங்களை அறிமுகப்படுத்திக்கோங்க..." என்றார். அனைவரும் ஒரு முறை அறிமுகம் செய்து விட்டுப் பாடத்தை கவணிக்க ஆயுத்தம் ஆனோம்.
பாடம் நடத்தினார். வகுப்பும் முடிந்தது. முடிவில், அவ்ர் , "உங்கள் அனைவருக்கும், உதவும் என்றால், இதற்கு முன்னர், இந்த ஜி.மேட் பரிட்சையிலே வெற்றிகரமாக எழுதி 860/1000 எடுத்த என் மகனின் மின்னஞ்சல் தருகிறேன் வேண்டும் என்றால், தொடர்பு கொண்டு, அவனினி ஆலோசனைகளை நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். என்று கூறினார்.
இந்த தேர்விலே வெற்றிப் பெற, வெற்றி பெற்றவர்களின் ஆலோசனை பெரிதும் உதவும் என்பதால், அனைவருமே அந்த முகவரியயைப் பெற ஆவலாயிருந்தோம். அவரும் அந்த கரும்பலகையிலே " அருன் ஐயர் @ ஜிமெயில்.காம்" என்று எழுதிப் போட்டார்.
அது வரையிலே அமைதியாக இருந்த நம்ம நன்பர், சுறுசுறுப்பாக ஆகிவிட்டார். " ஓ..நீங்கள் ஐயரா..தமிழ் ஐயர்கள் என்றாலே, அறிவு கூர்ந்தவர்கள் என்று உலகத்திற்கே தெரியும்மே..உங்கள் மகன் வெற்றி பெற்றதிலெ, ஆச்சர்யமே இல்லை", என்று அவர் கூசும் அளவிற்கு புகழ்ந்துவிட்டு, என்னிடம் திரும்பி " என்ன சொல்லுறீங்க" கேட்டான்.
எனக்கோ கடுப்பாக இருந்தது. எனக்கு அப்படி "ஜிங்க ஜாக்" தட்டி பழக்கமில்லாததால், அதை கவணியாததுப் போல் இருந்தேன். வகுப்பு முடிந்தவுடன், தமிழர்கள் என்பதால் சரி சேர்ந்தேப் போகலாம் என்று எண்ணி, முன்னறையிலே சில விவரங்கள் வினவி விட்டு, ஒன்றாக உயர்த்தியிலே கீழே சென்றோம்.
கீழே சென்ற உடனே மீண்டும் ஆரம்பித்தான், அந்தம்மா பையன் மார்க்கைப் பார்த்தீங்களா..அவங்க அவங்க தான்..என்ன சொல்லுறீங்க என்று மீண்டும் ஆரம்பித்தான். எனக்கு அப்படியே பத்திக் கொண்டு வந்தது. ஏன்..இப்படி சாதி சாதி என்று அலைகிறான் இவன் என்று. அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. பேச்சின் ஊடே, "நான் முதலியார் நீங்க என்ன சாதி". எனக்கு பற்றிக் கொண்டு வந்தது.
நான் அப்படியே பேச்சை மாற்றி வேற பேச தொடங்கினேன். அவனும் அதை விட்டுவிட்டு என் பேச்சில் தொடர்ந்தான். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு கிளம்பினோம். அடுத்த நாள் வகுப்பு முடிந்து வரும் போது மீண்டும், அவன் ஆரம்பித்தான். ஆனால், வேறு வழிமுறையிலே.
ரா: " நீங்க எந்த ஊரு.." ...( கிராமம் என்றால், மிகுதியாக இருக்கும் சாதிகளை வச்சி நெருங்கிவிடலாம் என்று எண்ணி கேட்கிறான்)
நான் : மதுரை.
ரா: உங்கப்பா பேரு...( அவர் பேருல சாதி அடையாளத்தை தேடலாம் என்று ..)
நா : ராமசாமி ரெட்டியார்
ரா: ஓ நீங்க ரெட்டியாரா..
நா : அவசரப்படாதீங்க..எங்கண்ணன் பேரு...கண்ணன் வாண்டையார்
ரா : அதெப்பாடி...ரெட்டியார், வாண்டையார்..
நா: தெரிஞ்சிக்கனுமின்னு கேட்டீங்க..அதுனாலே சொல்லுறேன்...எங்க அக்கா பேரு...செல்வ மீணாள்
ரா: அது நாட்டுக் கோட்டைச் செட்டியார் பேராச்சே...
நா: எங்கம்மா பேரு சொல்லவா....துலுக்க நாச்சியார்
ரா: என்னதுங்க உங்க குடும்பம் இப்படி இருக்கு...
நா : ஆமாம் அப்படித் தான்..
ரா: நானும் எப்படியாச்சும் உங்க சாதி தெரிஞ்சிக்கலாமின்னுப் பார்த்தா விட மாட்டேங்கிறீங்களே.. அப்படி சொல்ல முடியாதபடி என்ன சாதி. அப்ப நீங்க என்ன எஸ்.சியா.
நா: எஸ்.சின்னா உங்களுக்கு இழப்பமா...அவனும் மனுசன் தான். அப்படித் தான் வச்சிக்கோங்க.
ரா : நீங்க என்ன இப்படி பேசுறீங்க...நான் அப்படி என்ன கேட்டேன்...சாதி என்ன என்று தானே கேட்டேன்.
நா: அப்படி நான் என்ன சொல்லிட்டேன்...உங்களுக்கு அது அவசியமில்லாதது என்று தானே சொன்னேன்.
ரா: சரி..எப்படியும் நாம் 3 மாசம் சேர்ந்து தான் படிக்கப் போறோம். அதுக்குள்ள உங்க சாதி என்ன என்று நான் கண்டுப்பிடிக்கிறேன். ஆதரப் பூர்வமா ...என்ன பந்தயம்
அவனின் உறுதியயைக் கண்டு அசராமல், " கண்டுப்பிடிச்சுக் காட்டுங்க...பார்ப்போம்..முடியலையின்னா என்ன தர்ரீங்க.." என்று கேட்டேன். அவன் கையில் இருந்த அந்த 02 கைப்பேசியயைப் பார்த்தான்.."இதை நான் உனக்கு தந்துவிடுகிறேன்" என்றான்.
சிறிது நேரம் கழித்து இருவரும் விடைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம். அவன் சொல்லிச் சென்றது எனக்கு மண்டையிலே ஓடிக் கொண்டேயிருந்தது. எப்படியும் வெற்றி எனக்குத் தான் என்று சொல்லி மணம் துள்ளிக் குதித்தது...
எப்படி என்று கேட்கிறீர்களா...?
நான் தான் அனாதை விடுதியில் வளர்ந்தவனாச்சே..எனக்கே என் சாதி தெரியாதே...இவன் எப்படி கண்டுப்பிடிப்பான்.
அந்த 02 மேன்வல் வாங்கி எப்படி உபயோகிப்பது என்று பார்க்கனும்...உங்க கிட்ட இருக்கா...
பி.கு:-
1.இந்த கதையிலே வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் உன்மையே.. கதைக்காக சிறிது மாற்றி எழுதப்பட்ட உன்மைச் சம்பவம்
2.இது சர்வேசனின் போட்டிக்காக எழுதப்பட்டது. Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!: 'நச்சுனு ஒரு கதை' - போட்டியும், இதுவரை ஆட்டையில் உள்ள 14 பதிவர்களும்
Thursday, December 13, 2007
நான் அந்த சாதி...நீ எந்த சாதி..
Posted by TBCD at 6:02 PM
Labels: TBCD, கதை, சிறுகதை, சிறுகதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
23 Comments:
கலக்கல்
:)
அருமையான கதை! "நச்" நு இருக்கு! ;-)
கதையை கேட்டுடோம்ல... அடுத்த பதிவுல போன் கிடைச்சதா இல்லையானு போடுங்க... சூப்பரு... அந்த பையான் கணக்கு டீச்சர புகழ்ந்து கணக்கு பன்ன பார்தானோ... எனக்கு சந்தேகமா இருக்கு.
நூலும் தன் வாயால் கெடும்.
உனக்க்குத்தான் மொபைல்
டிபிசிடி அம்பி,
நீங்க சூத்ரவாளா? லோகம் கெட்டுடுத்து வோய். இந்த மாதிரி விதண்டாவாதம் பேசறவா இருக்கறச்சேதான் ஏற்கெனவே சுனாமி வந்து பகவான் எல்லாரையும் அள்ளிண்டு போனான். அதுக்குள்ள மறந்துடுத்தா? அவா அவா இருக்கற இடத்திலதான் இருக்கனும் வோய்.
எல்லாம் அந்த தாடி வெச்ச ராமசாமி உம்ம மனசை எல்லாம் கெடுத்து வெச்சிருக்கா!
பிராமணன் ஏழையா இருந்தாலும் அறிவில் குறைச்சல் உண்டா? அடுத்தவேளை சோத்துக்கு மணியாட்டி தட்டேந்தி உஞ்சவிருத்தி செய்தாலும், உழைக்காமல் உண்டு கொழுத்தாலும், மனதுக்கும் மூளைக்கும் சாப்பாடு போட மறக்க மாட்டான் தெரியுமோல்லியோ?
இல்ல தெரியாமதான் கேக்கறேன், சாதிய சொல்றதுல அப்படி என்னவோய் குறைஞ்சு போயிடறேள்?
இப்போ பாருங்கோ, செட்டியார்ன்னா நன்னா வியாபாரம் செய்வா... இந்தமாதிரி ஒவ்வொரு ஜாதிக்குன்னும் தனித்தனி குணம் இருக்கறதோல்லியோ! அதைத் தெரிஞ்சுக்கறதுக்காக அந்த அம்பி கேட்டிருக்கான். அதைப்போய் தப்பா புரிஞ்சுண்டு அவனை கரிச்சு கொட்டறேள்.
அப்றம் அது 02 இல்லைங்கானும், ஓ2 என்று எழுதி வையும்.
ஒருத்தனை ஒருத்தன் நல்லா சொறிஞ்சுக்கிட்டே இருங்கடே
//
நான் ஜெகதீசன் அல்ல said...
நூலும் தன் வாயால் கெடும்.
உனக்க்குத்தான் மொபைல்
//
நீர் ஜெகதீசன் இல்லைன்னா வேற யார்?... ஆவி.மன்னனா?
:))
ஐய்யர் வால் நல்லா சொன்னேல் இந்த ஈரோடு எல்லா சாதியாலுக்கும் ரோடு போட்டு கொடுத்துட்டால் அதான் இப்படி பன்றால் லோகம் கெட்டுபொய்டுத்து ஓய். நம்மாள்ளாம் நம்ம சாதியாலுக்கு ஒத்தாசையா இருக்கறது எவாளுக்கும் பிடிக்கல ஓய் எல்லாம் பொறாமை படறால்..
//நான் தான் அனாதை விடுதியில் வளர்ந்தவனாச்சே...//
இது அதைவிட கொடுமை!
நன்றி.
என்னாத்த கலக்குனோம்...தேயிலையா...காபியா..? :)))))
//* ஜெகதீசன் said...
கலக்கல்
:)*//
முதல் வருகை என்று நினைக்கிறேன்...
நன்றி !!! மீண்டும் வருக.. !!!!
//*OSAI Chella said...
அருமையான கதை! "நச்" நு இருக்கு! ;-)*//
சொந்த அனுபவத்தை இதுலே முடிச்சிப் போடுறீங்களோ... ;))))))
அது அவனுக்குத் தான் கிடைச்சது...
//* P.A.விக்னேஷ்வரன் said...
கதையை கேட்டுடோம்ல... அடுத்த பதிவுல போன் கிடைச்சதா இல்லையானு போடுங்க... சூப்பரு... அந்த பையான் கணக்கு டீச்சர புகழ்ந்து கணக்கு பன்ன பார்தானோ... எனக்கு சந்தேகமா இருக்கு.*//
சரி சொல்லுறதாலே யாருக்கு எங்க நிறையப் போகுதுன்னு நினைக்கிறேள்...
பொதுப் புத்தியிலே..இன்ன சாதிக்காரன் இப்படி என்று இருக்குதோன்னோ..அது அப்ப அப்ப மக்களுக்கு எட்டிப் பார்க்கும்..அது எட்டிப் பார்க்கப்பிடாது...பிடாதுன்னு பிடாது...
ஒருத்தன் கூட பேச சாதி தெரிஞ்சிக்கனுமின்னு அவசியம் இல்லை..ஓய்...
சாதியயை தூக்கிப் பிடிச்சிட்டு...நான் இன்ன சாதியின்னு சொல்லிட்டா...கண்ணம்மா பேட்டையிலே போடாம, பிருந்தவன்லயா போடப் போறா..எல்லாருக்கும் அதே இடம் தான்...விட்ட பேய்க்கிட்ட கூட சாதி பார்ப்பேளே...
தண்ணி விடாத எந்தச் செடியும் வளர்ச்சி குன்றி தான் போகும்.....
ஒரு சிலர் தோட்டத்திலே குடியேறி, எல்லா தண்ணிரையும் அவாளுக்கு மட்டுமே பறிச்சி வச்சிக்கிட்டு,
...காய்ச்சு...பழம் போட்டு...
எங்க தண்ணி இருந்தாலும், உறிஞ்சுக் குடிக்கிறவாளா ஆயீட்டா..
அதுக்காக...பாரு அவ எப்படி வளர்ந்திருக்கான்னு பேசப்படாது...
மத்தவாளுக்கு இப்போ தானே தண்ணி ஊத்த ஆரம்பிச்சியிருக்கோம்..இன்னும் கொஞ்ச வருசத்திலே, மரமாகி, விழுது விட்டு, வளர்ந்திடுவோ...அதுவரைக்கும் செத்த சும்மாயிரும்...
//*ராமதாஸ் ஐயர் said...
டிபிசிடி அம்பி,*//
ஹி..ஹி...
எப்பா...ராசா...சொறிஞ்சி சொறிஞ்சி புண்ணான முதுகோட இருக்கிறவங்க பேசுற பேச்சா இது....
//* Anonymous said...
ஒருத்தனை ஒருத்தன் நல்லா சொறிஞ்சுக்கிட்டே இருங்கடே*//
எதை விட கொடுமை ஐயா...கதைய விட கொடுமையின்னு சொல்லுறீங்களோ..... :)))))
வருகைக்கு நன்றி...!!!
//*மாசிலா said...
//நான் தான் அனாதை விடுதியில் வளர்ந்தவனாச்சே...//
இது அதைவிட கொடுமை!
நன்றி.*//
நிதர்சனம்...நச் கதை...
இங்க போய் பாருங்கோன்னா http://sinthikkatherinthamanithan.blogspot.com/2007/11/blog-post.html
99 சதமா நீங்க போராடி இட ஒதுக்கீடு எடுத்துண்டாலும் எங்களை எல்லாம் இந்த ஜென்மத்துக்கு.... இல்ல இல்ல ஏழேழு ஜென்மத்துக்கும் ஜெயிக்க முடியாது. எதுக்கு இந்த வீண் மற்றும் வெட்டி ஜம்பம்?
பேசாமல் வேலை வெட்டி இருந்தா பாரும் வோய்!
நாய்க்கு வாலை அளந்துதான் வெச்சிருக்கா பகவான்.
அதுபோல நன்கு தெரிஞ்சேதான் உங்களை எல்லாம் பாதத்தில் இருந்து பிறக்க வெச்சா! அது தெரியாம லோகத்தில் பினாத்திண்டு இருக்கேள்.
பாதத்தில் ஏன் உங்களை எல்லாம் பகவான் பிறக்க வெச்சான்னு கொஞ்சமேனும் சிந்திச்சு பாத்தேளா?
கப் னு பதற வச்சி சப் னு இது நச் னு போட்டிக்கு ன்னு சொல்லிட்டீங்களே
அனாதை ங்கிற வார்த்தையில் ஆடிப் புட்டோம்ல.
நன்றி...பாச மலரே... ;))
//* பாச மலர் said...
நிதர்சனம்...நச் கதை...*//
பார்த்தேன்..அனைவருமே இப்படி தான் ஆரம்பிக்கிறோம்..
நல்லா இருக்கு...
ஆனா,பத்தி பிரிச்சுப் போடுங்க.
எழுத்துப் பிழைகளை ஒரு முறை சரி பாருங்கள்..(சிரமமானது தான்..நான் கூட இன்னும் திருந்தவில்லை..)
/**புரட்சி தமிழன் said...
இங்க போய் பாருங்கோன்னா http://sinthikkatherinthamanithan.blogspot.com/2007/11/blog-post.html*//
ஐயங்கார்..அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா என்று சும்மா ஓதக்கூடாது...ஏன் பதறுறேள்..வரா வரா..அவாளை எல்லாம்..தூக்கி தூர எறிய வரா..
உலகத்திலே, நல்ல நாகரிகம் உருவாக்கத் தெரிந்த பூர்வகுடிகளின் வாரிசுகள் சோடை போகாதுன்னா...
ஓ..பகவானுக்கு வேறு வேலையே இல்லையா..நாய் வாலை எல்லாம் அளந்துண்டுயிருக்கார்...
உம்ம கதை எல்லாம் உடைச்சாச்சுங்கானும்...இன்னும் அதையே சொல்லிண்டு இருக்கேள்..புதுசா ஏதாச்சும் சொல்லும்..
//*ராகவன் ஐயங்கார் said...
99 சதமா நீங்க போராடி இட ஒதுக்கீடு எடுத்துண்டாலும் எங்களை எல்லாம் இந்த ஜென்மத்துக்கு.... இல்ல இல்ல ஏழேழு ஜென்மத்துக்கும் ஜெயிக்க முடியாது. எதுக்கு இந்த வீண் மற்றும் வெட்டி ஜம்பம்?
பேசாமல் வேலை வெட்டி இருந்தா பாரும் வோய்!
நாய்க்கு வாலை அளந்துதான் வெச்சிருக்கா பகவான்.
அதுபோல நன்கு தெரிஞ்சேதான் உங்களை எல்லாம் பாதத்தில் இருந்து பிறக்க வெச்சா! அது தெரியாம லோகத்தில் பினாத்திண்டு இருக்கேள்.
பாதத்தில் ஏன் உங்களை எல்லாம் பகவான் பிறக்க வெச்சான்னு கொஞ்சமேனும் சிந்திச்சு பாத்தேளா?*//
நன்றி கண்மணி அக்கா/ஆண்டி
இவன்
தமிழறிஞர் டிபிசிடி
//*கண்மணி said...
கப் னு பதற வச்சி சப் னு இது நச் னு போட்டிக்கு ன்னு சொல்லிட்டீங்களே
அனாதை ங்கிற வார்த்தையில் ஆடிப் புட்டோம்ல.*//
Post a Comment