நகரின் பிரபலமான பள்ளி.. அதன் 50வது ஆண்டு விழாவுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தது.
பள்ளியின் தாளாளர், நகரின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவர்... அவரே முன்னின்று எல்லாப் பணிகளையும் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்...
பள்ளியின் கட்டடங்களுக்கு வண்ணம் பூசும் வேலை முடியும் தருவாயில் இருந்தது.
ராமன் பெயர்ப் பலகையைக் கீழே இறக்கி புதிதாக எழுதிக் கொண்டிருந்தான்.. பக்கத்தில் இருந்த வகுப்பில் நடக்கும் பாடங்களைக் கேட்டவாறே...
தமிழாசிரியர் உள்ளே பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்....
சாதிகள் இல்லையடி பாப்பா! குலத்என..
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
இதைக் கேட்டு சிரித்தபடியே பெயர்ப் பலகையில் பள்ளியின் பெயரை எழுதிக் கொண்டிருந்தான் ராமன்.... பள்ளியின் பெயர் "**********களுக்க்குப் பார்த்தியப்பட்ட மேல்நிலைப்பள்ளி"!
3 Comments:
சாதிகள் இல்லையடி பாப்பாவிற்கு மட்டும் தான் எனக்கு இல்லை என்று பாரதி சொல்வதாக அவரின் பாடல்களின் அரசியல் சாயம் வெளுக்கப்பட்டு வருவதையும் கொஞ்சம் படியுங்கள் ஜெகதீசனாரே... ;)
//
TBCD said...
சாதிகள் இல்லையடி பாப்பாவிற்கு மட்டும் தான் எனக்கு இல்லை என்று பாரதி சொல்வதாக அவரின் பாடல்களின் அரசியல் சாயம் வெளுக்கப்பட்டு வருவதையும் கொஞ்சம் படியுங்கள் ஜெகதீசனாரே... ;)
//
ரிப்பீட்டேய்......
http://govikannan.blogspot.com/2007/07/blog-post_10.html
இதையும் படிங்க ஜெகதீசனாரே.
:)
இதையும் படிங்க
நன்றி டிபிசிடி & கோவி.கண்ணன்...
அந்த அரசியலுக்குள் எல்லாம் நுழைய விரும்பவில்லை... :)
Post a Comment