Monday, December 31, 2007

சிறுகதைச் சிற்பிகள் : முதல் சுற்று வெற்றிக்கு கொண்டாட்டம்

சமீபத்தில் நடந்த சிறுகதைப் போட்டியில், சுண்டெலி முதல் பெருச்சாளி வரை அனைவரும் பங்குப் பெற்றனர். நடந்த இந்தப் போட்டி, பதிவர்களிடையே, ஒரு ஆரோக்கியமான போட்டியயை உருவாக்கியது.

கடும் போட்டி நிலவிய இந்த சூழ்நிலையில்,

குழு "அ" பிரிவில், பெருவாரியான வாக்குகளைப் பெற்று, இறுதிச் சுற்றுக்கு தேர்வாகிருக்கியிருக்கும்
ஜெகதீசனுக்கு

எங்கள் வாழ்த்துக்களைச் சொல்லி பெருமிதம்/உவகை/பூரிப்பு என்று இன்ன பல விதமான உணர்ச்சிகளை அடைகிறோம்.

குழு "ஆ" பிரிவில், மாற்றான் தோட்டத்து மல்லிகை, கிங்க் ஆப் பிராங்க்ஸ், தங்கத்தின் தங்கம், பித்தளையின் பித்தளை,

குசும்பன்

பெருவாரியான வாக்குகள்ப் பெற்று, இரண்டாம் நிலை அடைந்து, இறுதிச் சுற்றுக்கு தேர்வாகிருக்கிறார். அவருக்கும் எங்களது வாழ்த்துக்களைச் சொல்லி, அதே பல பல உணர்ச்சிகளை அடைகிறோம்.

இறுதிச்சுற்றில்,இந்த இரண்டு கண்மணிகளில் எந்த மணி வெற்றிப் பெற்றாலும், எங்களுக்கு மகிழ்ச்சி என்பதை அறிவித்து, இவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
இவர்கள் வெற்றியயைக் கொண்டாடும் வண்ணம், இன்று உலகம் முழுவதும் இரவு 12.00 மணிக்கு வாண வேடிக்கைகள் நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த கொண்டாட்டத்தில் பங்கு பெற அனைவரையும், அவர் அவர் வீட்டு மொட்டை மாடிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு 5 நிமிடம் முன்னரே வந்திருந்து கை தட்டி உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

8 Comments:

கூரை வீட்டு கோபால் said...

//அவர் அவர் வீட்டு மொட்டை மாடிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு 5 நிமிடம் முன்னரே வந்திருந்து ///

நான் எங்க நைனா ஏறி நின்னு பார்பது?

said...

//பெருவாரியான வாக்குகள்ப் பெற்று, இரண்டாம் நிலை அடைந்து,//

அடைந்தா இல்லை அடையவைத்தா?:))

நன்றி நன்றி

said...

அடுத்த சுற்றுக்கு முன்னேறியவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

said...

நன்றி!!
:)

said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்

vicki paiyan said...

முதல் சுற்றுல ஜெயித்த மற்றவர்களை பார்த்தா உங்களுக்கு மனுசங்களா தெரியலயா ட்ட் ... ஏன் இப்படி பேதம் பிரித்து கொண்டாட்டம்...

said...

போட்டிகளை புறமுதுகிட்டு ஓட ஓட விரட்டிய மாவீரன் ஜெகதீசனுக்கு வாழ்த்துக்கள்.

ஆமத்தூர் ஆர்த்தி said...

மச்சான் தான் ஜெயிக்கனும் என்று மங்காத்தாவுக்கு மண் சோறு சாப்பிடுகிறேன் என்று வேண்டிக் கொண்டேன். மங்காத்தா புண்ணியத்தில் கொழிச்சாச்சு.