இன்னிக்கு சுஜியை எப்படியாவது வீட்டுக் கூட்டிவந்து அதை போட்டு காட்டிவிட வேண்டியதுதான்.
நினைத்துக் கொண்டு அவளுக்காக பைக்கில் காத்திருக்கும் போதே இவனை நோக்கி வந்தாள்,
"டேய் சுரேஷ்... தலை வலிக்குதுடா"
இதான் சாக்கு என்று நினைத்து,
"உனக்கு காப்பி தானே வேண்டும், நேரா எங்க வீட்டுக் போறோம்"
"ஐயையோ, உங்க வீட்டுக்கா ?"
"என்னமோ, பார்க்காதது போல சொல்றே, நாம காலேஜ் முடிச்சதுலேர்ந்து சேர்ந்து ஊர் சுற்றுவதுதான் நம்ம இரண்டு பேர் வீட்டுக்கும் தெரியுமே, நீ என்னை பார்க்க வர்ற சாக்குல வருங்கால அத்தைக்கு ஐஸ் வைக்க வர்றவ தானே"
"அடப்போடா... ஒரு காப்பிக்காக அவ்வளவு தூரமா ?"
"ஏய் ஏய் ...நான் காப்பி சூப்பராக போடுவேன்... ஐயா வோட காப்பியை நீ குடிச்சு பாரு அப்ப தெரியும்"
"எப்படியும் கல்யாணத்துக்கு அப்பறம், நீ தானே போடப்போறே அப்பறம் குடிக்கலாம்னு இருந்தேன்"
சொல்லிவிட்டு சிரித்தாள்
"அதைவிடு...நான் வீட்டுக்கு கூப்பிடுறத்துக்கு காரணமே...இன்னிக்கு வீட்டில் யாரும் இல்லை...அம்மா, தங்கை அப்பா எல்லாம் ஈவ்னிங் ஷோ சினிமா போயிருக்காங்க"
"அதுனால...."
"அது...இல்ல...அது வந்து ...வெளியில போய் ஹோட்டலில் பர்ஸை கரைப்பதைவிட வீட்டுக்கு போனா ஜாலியாக.."
"ஜாலியாக ...?"
"டிவிடில வீட்டியோ சாங்க் போட்டு கேட்கலாம்..."
"அதானே...வேற ஒன்னும் இல்லையே..."
"வேற எதும் வேணுமா ..." குறும்பாக பார்த்தான்
"நறுக்கிடுவேன்.....எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் தான்" ( அதே டயலாக் - மங்களூர் சிவா நோ டென்சன் )
அவன் வீட்டுக்கு சென்றார்கள்,
அவளை ஹாலில் உட்காரவைத்து விட்டு காப்பி போட்டுக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அருகில் உட்கார்ந்தான்,
சுஜி, இப்ப ஒரு டிவிடி போடப் போகிறேன்...நிர்வாணப்படம்
அதிர்ச்சி அடைந்து கோவமாக அவனைப் முறைத்துப் பார்ப்பதை சிறிதும் சட்டை செய்யாமல்
அவன் ரிமூட்டை அமுக்க... இருகைகளையும் குவித்து கண்களை மூடிக் கொண்டாள்,
"எதிர்பார்க்கல சுரேஷ்..."
"ப்ளிஸ்...தப்பா நினைச்சிக்கிட்டு இருக்கிறே...இங்கே பார்.." மெல்லியதாக சிரித்துவிட்டு அவன் அவளை மெதுவாக நெருங்கி விரல்களை விலக்க, விரல் இடுக்கு வழியாக லேசாக கூச்சத்துடன் வேண்டா வெறுப்பாக டிவியை பார்த்தாள்
அவனுடைய நிர்வாணப்படங்கள் ஒவ்வொரு சிலைடாக வந்து கொண்டிருந்தது,
அவன் கைகளை விலக்கிவிட்டு, கண்களை விரித்து பார்க்க...
டிவி திரையில் ஒட்டுத்துணிக் கூட இல்லாமல் குப்புறப் படுத்துக் கிடந்தான், நான்கு மாதக் குழந்தையாக இருந்த போது குப்புத்துக் கொண்ட போது எடுத்த படமாம், அப்பறம் மூன்று வயது வரை பல படங்களில் ... அம்மணமாகவும், ஆடைகளுடனும் அழகாக சிரித்துக் கொண்டிருந்தான்
--------- இதோட கதை முடிந்தது --------- மேலும் படிக்க விரும்புகிறவர்களுக்கு
"யூ நாட்டி... யூ வெர்ரி க்யூட்" அவள் அவனை செல்லமாக கிள்ளினால்
"வெட்கப்படுவேன்னு நினைத்தேன்..."
"நீ அம்மணமாக இருப்பதற்கு நான் ஏண்டா வெட்கப்படனும் ?"
அசடுவழிந்தான்...
"போன வாரம் தான் தாத்தா வீட்டில் இருந்த என் பழைய புகைப்படங்களையெல்லாம் டிவிடி ஆல்பமாக மாற்றினோம்" அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
திறந்திருந்த
கதவின் வழியாக நிழல் ஆட
"வாம்மா சுஜி"
"தியேட்டர்கிட்ட போனதும் இவ தலைவலிக்குதுன்னு சொன்னாள் எல்லோரும் திரும்பிட்டோம்... வர்ற வழியில் உன் அப்பா நண்பரை பார்த்துட்டு நின்னுட்டார்.
"அண்ணா... தலை இன்னும் வலிக்குது....எனக்கு ஒரு காப்பி போடேன் நீ தான் சூப்பராக போடுவியே..."
அதைக் கேட்டு மனதுக்குள் வந்த சிரிப்பை அடக்கி ... சுஜி அவனை குறும்பாக பார்த்தாள்.
சட்டென்று தடைபட்டு போன தனிமை (ப்ரைவசி) அவர்கள் இருவருக்கும் கொஞ்சம் வெறுமையாகத்தான் இருந்தது, ஆனாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
Monday, December 10, 2007
நிர்வாணப் படம்....!
Posted by கோவி.கண்ணன் at 4:33 PM
Labels: கோவி.கண்ணன், சிறுகதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
18 Comments:
//
"நறுக்கிடுவேன்.....எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் தான்" ( அதே டயலாக் - மங்களூர் சிவா நோ டென்சன் )
//
ஒவ்வொரு கதையிலயும் இதை இதை இதை எழுதினா மனுசன் எப்படி டென்சனாகாம இருக்க முடியும்?????
அப்புறம் அந்த லாஸ்ட்ல நான் நேஷனல் ஜியாகிரபி இல்லைனா டிஸ்கவரி சேனல் மேட்டர்னு நினைச்சேன்!!
//மங்களூர் சிவா said...
ஒவ்வொரு கதையிலயும் இதை இதை இதை எழுதினா மனுசன் எப்படி டென்சனாகாம இருக்க முடியும்?????
//
சிவா,
உங்களை நினைச்சு கதையில் கடைசியாக சொருகிய இடைச் சொருகல் அது.
:)
சில விசயங்கள் மாறுவதேயில்லை...அதே போல் தான் சில வசனங்களும்..
//அவன் ரிமூட்டை அமுக்க... இருகைகளையும் குவித்து கண்களை மூடிக் கொண்டாள்//
யாரோட கண்களை? :-))
வேர்ட் வெரிஃபிகேஷன்?????
யூ டூஊஊஊஊஊஊஊ(-:
நச் நச் னு கதைகள் எழுதிக்கிட்டு இருக்கீங்க:-))))
நல்லா இருக்கு.
ஹா ஹா ஹா.... அட.... கதை நல்லாவே சொல்லுறீங்க. :-)
:))))
சும்மா நச் நசுன்னு கதையா தள்ளி விடறீங்களேசாமி!
எல்லாம் ரொம்ப லைட்டா இருக்கே!
ஒரு ஸ்ட்ராங்க் நச் ஒண்ணு கொடுங்களேன்!
:)
//TBCD said...
சில விசயங்கள் மாறுவதேயில்லை...அதே போல் தான் சில வசனங்களும்..
//
இது தத்துவமா ? எதார்த்தமா ?
புரியல்ல. தயவு செய்து விளக்கவும்
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அவன் ரிமூட்டை அமுக்க... இருகைகளையும் குவித்து கண்களை மூடிக் கொண்டாள்//
யாரோட கண்களை? :-))
//
ரவி,
அவளுடைய கண்களைத்தான் இதில் என்ன சந்தேகம். நீங்க என்னச் சொல்ல வர்றீங்கன்னு புரியல்ல.
//துளசி கோபால் said...
வேர்ட் வெரிஃபிகேஷன்?????//
துளசிஅம்மா,
வேர்ட் வெரிஃபிகேசன் இருந்ததா ? கவனிக்கவில்லை. இப்போது இல்லை
//
யூ டூஊஊஊஊஊஊஊ(-:
நச் நச் னு கதைகள் எழுதிக்கிட்டு இருக்கீங்க:-))))
நல்லா இருக்கு.
//
மிக்க நன்றி. முடிஞ்ச அளவுக்கு எழுதுறேன். சுமார் கதைகள் தான் சூப்பர் கதைகள் எழுத சரக்கு இல்லை.
:
//காட்டாறு said...
ஹா ஹா ஹா.... அட.... கதை நல்லாவே சொல்லுறீங்க. :-)
//
மிக்க மிக்க மிக்க நன்றி !
//ஜெகதீசன் said...
:))))
//
:))
சிரிப்பானுக்கு சிரிப்பான் தான் போட முடியும் !
//VSK said...
சும்மா நச் நசுன்னு கதையா தள்ளி விடறீங்களேசாமி!
எல்லாம் ரொம்ப லைட்டா இருக்கே!
ஒரு ஸ்ட்ராங்க் நச் ஒண்ணு கொடுங்களேன்!
:)
//
விஎஸ்கே ஐயா,
நாங்கெளெல்லாம் வளரும் எழுத்தாளர்கள் !!!
லைட்டாக எடுத்துக் கொள்ளுங்கள்...!
:)
ஒவ்வொரூ கதையிலயும் 'நச்'மீட்டர் ஏறிகிட்டே இருக்கே.
நான் எப்படி முடிச்சிரூப்பேன்னா,
"சின்ன வயசு போட்டோவெல்லாம் டி.வி.டி யா போட்டிருக்கேன். ஹி ஹி" என்று ஹீரோ சொல்ல்ல.
"அடத்தூ சாவு கிராக்கி. ஆளு வளந்த அளவுக்கு மூள வளரிலியே, ஏதோ 'நச்'னு ஹாலிவுட் மேட்டர் காட்டுவன்னு பாத்தா".. என்று விசுக்கிக் கொண்டே வெளியேறினாள், ஹீரோயின் ;)
அடிக்க வராதீங்கப்பு!
:)
நல்லா இருக்கு. இந்த கதையை குமுதத்திற்கு அனுப்பலாம்.
//SurveySan said...
ஒவ்வொரூ கதையிலயும் 'நச்'மீட்டர் ஏறிகிட்டே இருக்கே.
நான் எப்படி முடிச்சிரூப்பேன்னா,
"சின்ன வயசு போட்டோவெல்லாம் டி.வி.டி யா போட்டிருக்கேன். ஹி ஹி" என்று ஹீரோ சொல்ல்ல.
"அடத்தூ சாவு கிராக்கி. ஆளு வளந்த அளவுக்கு மூள வளரிலியே, ஏதோ 'நச்'னு ஹாலிவுட் மேட்டர் காட்டுவன்னு பாத்தா".. என்று விசுக்கிக் கொண்டே வெளியேறினாள், ஹீரோயின்
அடிக்க வராதீங்கப்பு!
//
சர்வேசன்,
என் கதை நாயகிகளை பெற்றவர்கள் நல்லா வளர்த்திருக்காங்க. வேற ஆளைப் பாருங்க.
:)
//ஆனந்த விகடன் ஆசிரியர் said...
நல்லா இருக்கு. இந்த கதையை குமுதத்திற்கு அனுப்பலாம்.
//
நீங்களே அனுப்பிடுங்க...பரிசு கொடுத்தால் நான் வாங்கிக் கொள்கிறேன்...
:)
Post a Comment