ஆஸ்ட்ரோ தொலைக் காட்சியில் முதல் முறையாக என்ற அறிவிப்புடன் என்று "சிவி" படத்திற்கு விளம்பரம் ஓடிக்கொண்டியிருந்தது. அதை பார்க்கும் போது அவனுக்கு சற்றே ஒரு மாதிரியாக இருந்தது.
அவன் மனைவிக்கு எந்த நிகழ்ச்சி ஓடினாலும், விளக்கம் கொடுக்கனும். அதுலேயும், தொலைக்காட்சியயை விட்டு பார்வையயை விலக்கி, அவன் முகம் பார்த்து கேட்பாள், அதுக்கு அவன் விளக்கம் சொல்லுவதற்குள் அடுத்த காட்சியும் புரியாது அவளூக்கு.
இந்தப் படம் ஒரு பேய் படம் என்று விளம்பரத்திலே, தெரிந்துவிடுகிறது. கதாநாயகனுக்கு கழுத்து வலிப்பதுப் போன்று ஒரு காட்சி, அடுத்ததாக, எடைப் பார்க்கும் இயந்திரத்திலே, ஒரு அழகான இளைஞனின், எடை 120 எனக் காட்டுகிறது. அதற்கு அடுத்ததாக, நிழல்கள் இரவி, ஒரு மருத்துவராக, செத்துப் போனவங்க, தனக்கு பிரியமானவர்கள் உடனே, ஆவியாக சுத்த வாய்ப்பு இருக்கு என்று கூறுகிறார்.
இதற்கு அடுத்த காட்சியாக, நாயகன், ஒரு நிழற்படத்தை, அச்சிட்டுப்பார்க்கிறார். அதை நமக்கும் காட்டுகிறார். நாயகனை மட்டுமே நிறுத்தி, எடுக்கப்பட்ட நிழற்ப்படத்திலே, நாயகன் தோளிலே, ஒரு பேய் அமர்ந்திருக்கிறது. தமிழ் பேய்க்கான அனைத்து அம்சத்துடனும் , அட்டகாசமாக தோளிலே ஏறி அமர்ந்திருக்கிறது பேய்.
இதை இடைவிடாது, தொடர்ந்து ஒலிப்பரப்பிக்கொண்டேயிருந்தனர். அவன் தனியாக இதை பார்த்துவிட்டேன். ஆனால், அவன் மனைவி இதை இன்னும் பார்க்கவில்லை. இதோ இப்போது தான் வருகிறாள்.
"ஏங்க..இது என்னாது இது..." என்றாள்.
"படம் விளம்பரம்மா..." என்று சொல்லிவிட்டு, மீண்டும் பார்க்கலானான்.
"அப்படியா..என்னங்க இது,,,120 கிலோன்னு காட்டுறான்"..என்று வினவினாள்.
"பொறு முழுசாப் பாரு புரியும்", என்று சொன்னான்.
"என்னங்க இது...கழுத்து மேலே பேய்..யப்பா பாக்கவே பயமாயிருக்கே" என்று சற்றே பயந்தவாரே சொன்னாள்.
"இது எல்லாம் நீ ஏன் பார்த்துக்கிட்டு இருக்கே..அப்பறம் பயந்து போகவா.." என்று பரிவுடன் சொன்னான
"ஏங்க உங்களூக்கு பேய் அப்படின்னா பயம் கிடையாதா" என்று அவள் ஆச்சர்யுத்துடன் கேட்டாள்.
அவன் சற்றே பெருமிதமாக " உன்னைப் போல பேய் கூட எல்லாம்..குடும்பம் நடத்துன வேற எந்த பேய்கும் பயப்படத்தேவையில்லை " என்று சொல்லியவாறு, தொலைக்காட்சியில் இருந்து, பார்வையயை விலக்கி, மனைவியயைப் பார்த்தான்.
நாற்காலி காலியாக இருந்து. கழுத்தில் ஏதோ அழுத்தியது போன்ற உனர்வு தோன்றியது.
திடிரென்று, மனைவிக்கு இன்று அலுவலகம் என்பதும், தனக்கு மட்டுமே விடுமுறை என்பதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது.
Tuesday, December 25, 2007
தொல்லைக்காட்சி (Not Adults Only)
Posted by TBCD at 6:39 PM
Labels: TBCD, கதை, சிறுகதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
17 Comments:
அய்யோ... பயந்துட்டேன்.....
:)
ஸ்கோர்:
Australia 183/3 (45.2 ov)
//" உன்னைப் போல பேய் கூட எல்லாம்..குடும்பம் நடத்துன வேற எந்த பேய்கும் பயப்படத்தேவையில்லை " //
ரொம்பவும் துனிசால் தான், ஒடம்பு இருக்கிறதால சொல்லுறீக.
:)
இது பேய்க்கதை இல்லை!
ஸ்கோர்:
Australia 211/3 (54.4 ov)
//திடிரென்று, மனைவிக்கு இன்று அலுவலகம் என்பதும், தனக்கு மட்டுமே விடுமுறை என்பதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது.//
அடப்பாவி, நீ நல்லவன் என்றல்லவா நினைத்தேன். வேலைக்காரி கூட உல்லாசமா ?
//"ஏங்க உங்களூக்கு பேய் அப்படின்னா பயம் கிடையாதா" என்று அவள் ஆச்சர்யுத்துடன் கேட்டாள்.//
பேய் அப்படின்னா பயம் கிடையாது,
பேய் இப்படின்னு பேய் இருப்பதை காட்டினால் தான் பயம் வரும்.
என் படத்தை பார்த்தியா ?
இந்த படத்தில் நானும் நடித்திருக்கிறேன்.
- தழல்ரவி அல்ல
நிழல்கள் ரவி
நான் நடிக்கும் ஜெகன் மோகினி வருது, பினாங்கில் ரசிகர்மன்ற டிக்கெட்டெல்லாம் உன் பொறுப்பில் தான் விடப் போகிறேன்
//நமீதா said...
நான் நடிக்கும் ஜெகன் மோகினி வருது, பினாங்கில் ரசிகர்மன்ற டிக்கெட்டெல்லாம் உன் பொறுப்பில் தான் விடப் போகிறேன்
//
அரவிந்தா,
அவ படத்தை பார்க்கும் முன்பு என் படத்தை பாரு
பேயால் உள்ளூருக்கு தொலை பேச முடியாது...என் தெரியுமா ? அதுக்கு கால் இருக்காது லோக்கல் கால் போட முடியாது. ஆனால் எஸ்டிடி போடும்
கும்மி டெஸ்ட்1
ஆஸ்திரேலியா: 270/5 (69.2 ov)
//
"தொல்லைக்காட்சி (Not Adults Only)"
//
இதை படித்ததும் திரும்பிவிட்டேன்!!!
//" உன்னைப் போல பேய் கூட எல்லாம்..குடும்பம் நடத்துன வேற எந்த பேய்கும் பயப்படத்தேவையில்லை " //
தெகிரியம்தான்!!
//தமிழ் பேய்க்கான அனைத்து அம்சத்துடனும் , அட்டகாசமாக தோளிலே ஏறி அமர்ந்திருக்கிறது பேய்.//
:-)) இப்படியெல்லாம் பொதுவா சொல்லக்கூடாது,அது எந்த ஜாதிப் பேய் என்று சொல்லுங்கள்.
Post a Comment