Monday, December 31, 2007

சிறுகதைச் சிற்பிகள் : முதல் சுற்று வெற்றிக்கு கொண்டாட்டம்

சமீபத்தில் நடந்த சிறுகதைப் போட்டியில், சுண்டெலி முதல் பெருச்சாளி வரை அனைவரும் பங்குப் பெற்றனர். நடந்த இந்தப் போட்டி, பதிவர்களிடையே, ஒரு ஆரோக்கியமான போட்டியயை உருவாக்கியது.

கடும் போட்டி நிலவிய இந்த சூழ்நிலையில்,

குழு "அ" பிரிவில், பெருவாரியான வாக்குகளைப் பெற்று, இறுதிச் சுற்றுக்கு தேர்வாகிருக்கியிருக்கும்
ஜெகதீசனுக்கு

எங்கள் வாழ்த்துக்களைச் சொல்லி பெருமிதம்/உவகை/பூரிப்பு என்று இன்ன பல விதமான உணர்ச்சிகளை அடைகிறோம்.

குழு "ஆ" பிரிவில், மாற்றான் தோட்டத்து மல்லிகை, கிங்க் ஆப் பிராங்க்ஸ், தங்கத்தின் தங்கம், பித்தளையின் பித்தளை,

குசும்பன்

பெருவாரியான வாக்குகள்ப் பெற்று, இரண்டாம் நிலை அடைந்து, இறுதிச் சுற்றுக்கு தேர்வாகிருக்கிறார். அவருக்கும் எங்களது வாழ்த்துக்களைச் சொல்லி, அதே பல பல உணர்ச்சிகளை அடைகிறோம்.

இறுதிச்சுற்றில்,இந்த இரண்டு கண்மணிகளில் எந்த மணி வெற்றிப் பெற்றாலும், எங்களுக்கு மகிழ்ச்சி என்பதை அறிவித்து, இவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
இவர்கள் வெற்றியயைக் கொண்டாடும் வண்ணம், இன்று உலகம் முழுவதும் இரவு 12.00 மணிக்கு வாண வேடிக்கைகள் நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த கொண்டாட்டத்தில் பங்கு பெற அனைவரையும், அவர் அவர் வீட்டு மொட்டை மாடிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு 5 நிமிடம் முன்னரே வந்திருந்து கை தட்டி உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Thursday, December 27, 2007

சாதிகள் இல்லையடி பாப்பா.....

நகரின் பிரபலமான பள்ளி.. அதன் 50வது ஆண்டு விழாவுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தது.

பள்ளியின் தாளாளர், நகரின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவர்... அவரே முன்னின்று எல்லாப் பணிகளையும் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்...

பள்ளியின் கட்டடங்களுக்கு வண்ணம் பூசும் வேலை முடியும் தருவாயில் இருந்தது.

ராமன் பெயர்ப் பலகையைக் கீழே இறக்கி புதிதாக எழுதிக் கொண்டிருந்தான்.. பக்கத்தில் இருந்த வகுப்பில் நடக்கும் பாடங்களைக் கேட்டவாறே...

தமிழாசிரியர் உள்ளே பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்....

சாதிகள் இல்லையடி பாப்பா! குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர
என..

இதைக் கேட்டு சிரித்தபடியே பெயர்ப் பலகையில் பள்ளியின் பெயரை எழுதிக் கொண்டிருந்தான் ராமன்.... பள்ளியின் பெயர் "**********களுக்க்குப் பார்த்தியப்பட்ட மேல்நிலைப்பள்ளி"!

Tuesday, December 25, 2007

பொறுமை கடலினும் பெரிது - (பெண்ணியவாதிகளுக்கு மட்டும் )

கண்ணன் கணிணி முன்பு அமர்ந்திருந்தான். இப்போது தான் எழுந்தான், காபி குடிக்கும் முன் கணிணியயை திறந்து அனுமதிக்கு வந்திருக்கும் பின்னுட்டங்களை ஒரு பார்வையிட்டப்படியே, தொலைக்காட்சியில் என்ன ஓடுகிறது என்று பார்த்துக் கொண்டியிருந்தான்.

சமையலறையில் இருந்து, அவனுடைய மனைவி ரம்யா அழைக்கிறாள்."என்னங்க..என்னங்க..காபி எடுக்கிறதுக்கு கூட நான் கூப்பிட்டுச் சொல்லனும்மா...விடிஞ்சி விடியாம அதுக்குள்ள போயி உக்கார்ந்தாச்சா..." என்று கூவியபடியே, காபியயை கையில் கொடுத்தாள்.

புன்முறுவலித்தபடி, ஒரு நாளைக்கு நான் எத்தனை பதிவு போடுறேன், என் அருமை பெருமை தெரியாம பேசுறா என்று மனதுக்குள் நினைத்தபடி மீண்டும் கடமையில் மூழ்கினான்.

எண்ணிக்கையில் சேர்க்க முடியாத அளவிற்கு வேண்டுக்கோள் விடுத்த வண்ணமாக வேலையில் ஆழ்ந்தாள் அவன் தர்ம பத்தினி ரம்யா. அவனும், யாருமே ஆன்லைனில் இல்லாத போது மட்டும் , ஏதோ அவளுக்கு உதவி பண்ணுவது போல் அவ்வப்போது மட்டும், அட்டென்டென்ஸ் போட்டு வந்தான்.

சிறிது நேரம் கழித்து, அவர்கள் பெற்று எடுத்த, செல்வன், அருண் முழித்து, அழுகையயை இனிதே ஆரம்பித்தான். மனைவி சொல்லும் வரை அப்படியே ஆழ்ந்திருந்த கண்ணன், பிறகு குழந்தையயை போய் சமாதானம் செய்தான்.

சிறிது நேரம் கழித்து, குழந்தைக்கு உணவு கொடுக்க போராடும், மனைவியயை சிறிதும் சட்டை செய்யாது, அவன் மட்டும் உண்வுண்டு கலா ரசனையயை பெருக்குகிறேன் என்று, நன்பர்கள் கொடுத்த குறுந்தகடு, அடர் தகடுகளை புரட்டப் போய் விட்டான்.

நன்பகலில் ஒரு குட்டித்தூக்கம் போட்டுவிட்டு, மீண்டும் முழிக்கும் போது, சாப்பாட்டு வேளை ஆகிவிட்டியிருந்தது. இன்னும்மா சமைச்சு முடிக்கல...என்னைக்குத் தான் நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கும்மோ என்று அங்கலாய்த்தவாறு, மீண்டும் கணிணி முன் அமர்ந்தான்.

உரையாடியில், வந்து போகும் அனைவரிடமும் பேசி முடித்து, அவன் மீண்டும் திரும்பும் போது, சமையல் முடிந்திருந்தது. வாடகைக்கு எடுத்த அந்தப் படத்தை இப்பயாவது நான் பார்க்கிறேன் என்று ரம்யாவின் வேண்டுக்கோளுக்குச் செவி சாய்த்து அதனை ஓடவிட்டான்.

சாப்பாடு, தட்டிலே வந்தது. அவன் உண்ணத் தொடங்கினான். நன்றாகவேயிருந்தது. அதனை நேரிடையாகச் சொல்லாமல் மனைவியயை கிண்டலடித்து, காலை முதல் தந்து கடுப்பை குறைக்க முயற்சி செய்து கொண்டியிருந்தான். அவர்கள் உணவு உண்ணும் போது, அவர்கள் மகன் சிறு வாயளவு உணவு வாங்கி உண்ணுவது வழக்கம். இன்று தகப்பனிடம் வாங்கிக் கொள் என்று மனைவி கூறிவிட்டதால், தகப்பனிடம், தவழ்ந்து, நடந்து, என்று விளையாடிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டியிருந்தான்.



ரம்யா உணவு உண்ண உட்காரும் போது தான் அதை கவணித்தாள். அருண் கக்கா , போய் அது அவனின் கால், மற்றும் தரையிலே அப்பியிருப்பதை.
"இப்போது தான் அக்கடா என்று அமர நினைத்தேன்..என் நிம்மதியயை கெடுக்கா அப்பனும் , மகனும் போட்டி போட்டுக் கொண்டுயிருக்கிறீர்களா", என்று பல்லவி பாட ஆரம்பித்தாள்.

ரமயா நகளுவது போல் தெரியவில்லை. சரி..நாம் தான் ஜென்டில்மேண் ஆவோமே என்று நினைத்து, மகனை அனைத்து, தன் மீது பட்டுவிடாத படி தூக்கி கழிவறைக்குச் சென்று, சுத்தம் செய்து அழைத்து வந்தான்.
"இதுக்கு அவனை கோவிச்சா அவனுக்கு என்ன தெரியும், குழந்தைங்கன்னா அப்படித் தான், நாம் தான் பொறுமையா இருக்கனும்" என்று சொல்லி குழந்தையயை கொஞ்சிவிட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பிட்டு விட்டு, அவன் போகும் ரம்யா அவன் கையிலே டிஷ்யூ பேப்பரிலே எதையோ துடைத்து எடுத்து, பார்த்து சுத்தம் செய்யக் கூடாதா பாருங்க ஒட்டியிருக்கு என்று சொல்லிவிட்டு போனாள். அவன் அதை அப்போதே மறந்துவிட்டு, மீண்டும் கணிணியிலே மூழ்கலானான்.

சமையலறையிலே இருந்து ரம்யா கூவினாள்.."என்னங்க...நான் கூட ஏதோ கழுவிடும் போது தான் உங்க மேலே பட்டிருக்கும்ன்னு நினைச்சேன்..தட்டுல கொஞ்சம் ஒட்டியிருக்கு" என்றாள்.

வழக்கம் போல் இல்லாமல், சட்டென்று, அவள் சொன்னது காதிலே வீழ்ந்தது. "என்ன சொல்லுறே நீ"...என்று இப்போதாவது மாற்றிச் சொல்ல மாட்டாளா என்ற நப்பாசையில் கேட்டான்.

"நான் என்னாத்தச் சொல்லா...அவன் ஆயி போயி தெரிக்கிறவரைக்கும் என்னங்க பண்ணிக்கிட்டுயிருந்தீங்க..." என்று கேட்டாள்.

அவன் உடனே.."ராஸ்கல், நேரம் காலமே தெரியாமா..சே..சே...குழந்தைகளோட இதே இம்சை", என்றபடி மகனை முறைத்தான். அருண் அப்பா சொல்வது எதுவும் புரியாமல், எப்பவும் அப்பாவைப் பார்த்து சிரிப்பதை விட அதிகமாகச் சிரித்தான்.

"இதுக்கு அவனை கோவிச்சா அவனுக்கு என்ன தெரியும், குழந்தைங்கன்னா அப்படித் தான், நாம் தான் பொறுமையா இருக்கனும்" என்று சமாதானம் சொன்னாள்.

"நான் சொன்னதையே எனக்கேவா...இருக்கட்டும்..இருக்கட்டும்." என்று சொல்லிவிட்டு..மீண்டும் "அதுக்கில்லடி, எத்தனை முறை சொல்லியிருக்கேன், அவனுக்கு டயப்பர் போடு, போடுன்னு...சே...மனுசன் சொன்ன யாரு கேக்கிறா.."

"நான் தான் நீங்க உங்க அன்பு நன்பர்களோட உளரிக்கிட்டு இருக்கும் போது அத்தனை தடவைச் சொன்னேன்...அவன் காலையிலேயிருந்து போகலை...டயப்பர் போட்டு விடுங்க..நான் வேலையா இருக்கேன்னு..கேட்டாத் தானே..எல்லாமே நானே செய்யனும்...ஒரு துரும்பை எடுத்து இந்தப் பக்கம் அந்தப் பக்கம் போட்டுறாதீங்க..."

"வேணும்டி..வேணும்...எனக்கு இதுவும் வேனும்..இன்னமும் வேனும்...நீ சாப்பிட உக்கார்ந்திட்டியேன்னு நான் தூக்கிட்டுப் போனேன் பாரு...அதுக்கு இது எல்லாம் சொல்லுவ.."

"ஏன்டி...எதாவது ஆகுமா...ஒன்னும் பிரச்சனை பண்ணிடாதே..." என்று கவலையயை தெரிவித்தான் கண்ணன்.

"சரி விடுங்க..ஒன்னும் பண்ணாது..வழக்காம நல்லாவே இல்லையின்னு சொல்லுவீங்க..இன்னைக்குன் நல்லாயிருக்குன்னு சொல்லும் போதேன் நினைச்சேன்..இப்ப இல்ல தெரியுது..என்ன காரணமின்னு.." என்று கிண்டலடித்தாள்.

"இருக்கும் இருக்கும்...குழந்தை வளர்ப்புன்னா சும்மாவா..யாரு...என் மகன் தானே..போனா போகுது.." என்று சமாதானம் ஆகமலே சமாதானம் ஆனாவாறு குரல் விட்டான்.

ரம்யா சமையலறையிலே விழுந்து விழுந்து சிரித்தாள். அவள் சிரிக்க சிரிக்க, இவன் என்ன செய்வதெண்று அறியாமல்...அசடு வழிந்து...பேச்சை மாற்றினான்.

அவளும் சரி...போதும் இப்போதைக்கு சிரிப்பதை நிறுத்தினாள்.

அவன் கையில் இருந்தது, சாம்பார் என்றும், தட்டிலே எதுவுமே இல்லை என்பதையும் இரவு வரை சொல்லுவதில்லை என்று மனதிற்குள் முடிவு செய்து, அவன் படும்பாட்டை ரசிக்க ஆரம்பித்தாள்.

தொல்லைக்காட்சி (Not Adults Only)

ஆஸ்ட்ரோ தொலைக் காட்சியில் முதல் முறையாக என்ற அறிவிப்புடன் என்று "சிவி" படத்திற்கு விளம்பரம் ஓடிக்கொண்டியிருந்தது. அதை பார்க்கும் போது அவனுக்கு சற்றே ஒரு மாதிரியாக இருந்தது.

அவன் மனைவிக்கு எந்த நிகழ்ச்சி ஓடினாலும், விளக்கம் கொடுக்கனும். அதுலேயும், தொலைக்காட்சியயை விட்டு பார்வையயை விலக்கி, அவன் முகம் பார்த்து கேட்பாள், அதுக்கு அவன் விளக்கம் சொல்லுவதற்குள் அடுத்த காட்சியும் புரியாது அவளூக்கு.

இந்தப் படம் ஒரு பேய் படம் என்று விளம்பரத்திலே, தெரிந்துவிடுகிறது. கதாநாயகனுக்கு கழுத்து வலிப்பதுப் போன்று ஒரு காட்சி, அடுத்ததாக, எடைப் பார்க்கும் இயந்திரத்திலே, ஒரு அழகான இளைஞனின், எடை 120 எனக் காட்டுகிறது. அதற்கு அடுத்ததாக, நிழல்கள் இரவி, ஒரு மருத்துவராக, செத்துப் போனவங்க, தனக்கு பிரியமானவர்கள் உடனே, ஆவியாக சுத்த வாய்ப்பு இருக்கு என்று கூறுகிறார்.

இதற்கு அடுத்த காட்சியாக, நாயகன், ஒரு நிழற்படத்தை, அச்சிட்டுப்பார்க்கிறார். அதை நமக்கும் காட்டுகிறார். நாயகனை மட்டுமே நிறுத்தி, எடுக்கப்பட்ட நிழற்ப்படத்திலே, நாயகன் தோளிலே, ஒரு பேய் அமர்ந்திருக்கிறது. தமிழ் பேய்க்கான அனைத்து அம்சத்துடனும் , அட்டகாசமாக தோளிலே ஏறி அமர்ந்திருக்கிறது பேய்.

இதை இடைவிடாது, தொடர்ந்து ஒலிப்பரப்பிக்கொண்டேயிருந்தனர். அவன் தனியாக இதை பார்த்துவிட்டேன். ஆனால், அவன் மனைவி இதை இன்னும் பார்க்கவில்லை. இதோ இப்போது தான் வருகிறாள்.

"ஏங்க..இது என்னாது இது..." என்றாள்.

"படம் விளம்பரம்மா..." என்று சொல்லிவிட்டு, மீண்டும் பார்க்கலானான்.

"அப்படியா..என்னங்க இது,,,120 கிலோன்னு காட்டுறான்"..என்று வினவினாள்.

"பொறு முழுசாப் பாரு புரியும்", என்று சொன்னான்.

"என்னங்க இது...கழுத்து மேலே பேய்..யப்பா பாக்கவே பயமாயிருக்கே" என்று சற்றே பயந்தவாரே சொன்னாள்.

"இது எல்லாம் நீ ஏன் பார்த்துக்கிட்டு இருக்கே..அப்பறம் பயந்து போகவா.." என்று பரிவுடன் சொன்னான

"ஏங்க உங்களூக்கு பேய் அப்படின்னா பயம் கிடையாதா" என்று அவள் ஆச்சர்யுத்துடன் கேட்டாள்.

அவன் சற்றே பெருமிதமாக " உன்னைப் போல பேய் கூட எல்லாம்..குடும்பம் நடத்துன வேற எந்த பேய்கும் பயப்படத்தேவையில்லை " என்று சொல்லியவாறு, தொலைக்காட்சியில் இருந்து, பார்வையயை விலக்கி, மனைவியயைப் பார்த்தான்.

நாற்காலி காலியாக இருந்து. கழுத்தில் ஏதோ அழுத்தியது போன்ற உனர்வு தோன்றியது.

திடிரென்று, மனைவிக்கு இன்று அலுவலகம் என்பதும், தனக்கு மட்டுமே விடுமுறை என்பதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது.

Thursday, December 20, 2007

காதாலா....?..இது காதாலா...?...- கிழிக்கப் போவது யாரு...?

பாகம் ஒன்னு, இரண்டு
மூன்று

நம்ம லால் என்ன சொன்னான்..." இல்லை மீனாக்கூட அழகானவள்".

யார் அந்த மீனா அப்படின்னு கேட்டுட்டு சொல்லாமா போயிட்டேன்னு கோபப்படாதீங்க. இப்ப சொல்லுறேன். நம்ம ரவி படிக்கிற வகுப்புத் தலைவி தான் மீனா. நல்ல நெடு நெடுன்னு வளர்த்தி. பேருக்கு ஏத்தா மாதிரி, மீன் போல கண்ணுன்னு, லால் மட்டும் சொல்ல மாட்டான்,அவ பின்னாடி சுத்தற மூனு, நாலு பசங்க சொல்லுவாங்க. நல்ல படிக்கக் கூடிய பொண்ணு. சுவாரசியமான பொண்ணு.

ஒரு தடவை என்ன ஆச்சி, வகுப்பாசிரியர், கரும்பலகையயை அழிக்க அழிப்பான் கேட்டார். வகுப்பு தலைவர்/தலைவியோட வேலை, அழிப்பானை,பத்திரமா வீட்டிற்கு எடுத்துட்டுப் போயிட்டு, அடுத்த நாள் கொண்டு வந்து விட வேண்டும். அன்னைக்கு பார்த்து, மீனா, எடுத்துட்டு வரவில்லை. கேட்டது, துளசி வாத்தியார். நிமிண்டினாருன்னா, கை பழுத்துடும். இவ எந்திரிச்சி, "மறந்துட்டேன்னு" சொல்லிட்டா. பசங்க எல்லாம் அப்படியே பார்த்துக்கிட்ட இருக்காங்க. வழக்கமா பசங்கன்னா, திட்டுவாங்க. பொண்ணுங்கன்னா, அப்படியே விட்டுடுவாங்க. இவர் வழக்கத்தை மாத்துறேன்னு.."சாப்பிட மறப்பியா" அப்படின்னு கேட்டுட்டார்.
"ஆமா, இன்னைக்கு சாப்பிடவும் மறந்துட்டேன்னு", சொல்லிட்டா.
வகுப்பறையே, "கொல்"ன்னு சிரிச்சிடுச்சி. வாத்தியார், என்ன சொல்லுறதுன்னு தெரியாமா, "போ, எங்கயாச்சும் வாங்கிட்டு வா"ன்னு சொல்லி விரட்டிவிட்டுட்டார். பசங்கன்னா, இதுக்கு சொல்ல இடம் தரவே மாட்டானுங்க. பக்கத்து வகுப்பு தலைவர்கூட ஒரு ஒப்பந்த்தம் போட்டு, வாங்கி வச்சிடுவாங்க.


சரி, விசயத்து வருவோம். நம்ம லாலுக்கு இந்த வருடம் ஆரம்பம் ஆகும் போது, ஹார்மோனும் வேலை செய்ய ஆரம்பிச்சு, யாரோட உந்துதலும் இல்லாமா, ஒரு தலையா மீனாவை பாக்க ஆரம்பிச்சிட்டான். இந்த பாக்குறதுங்கிறது, காதலை விட பெரிய வார்த்தை. நான் இந்தப் பொண்ணை பாக்குறேன்னு யாராச்சும் சொல்லிட்டா, அவன் பெரிய ஆள். அப்பறம், அந்தப் பொண்ணை சும்மா பார்த்தக் கூட அவன் இவனை கேள்வி கேட்க உரிமை இருக்கு. அது தான் எழுதப்படாமலே அவர்கள் வகுப்பிலே கடைப்படிக்கப்படும் வரைமுறை.

இப்படி இருக்கிற சூழ்நிலையிலே, நம்ம ரவி கொஞ்ச நாளா, ஒரு விதமான போதையில சுத்துறதைப் பார்த்தும், லால் மனதிலே ஒரு எண்ணம். தான் போய் சொல்வதை விட வேறு வழியிலே தகவலை அனுப்பினால் நன்றாக இருக்கும், அதுவும், லக்ஷ்மியே, இவனை விரும்புவதாக சொல்லப்படுகிற போது, ரவி மூலம் லக்ஷ்மி, லக்ஷ்மி மூலம் மீனா. என்று ஐந்தாண்டு திட்டம் போல் பெரிய திட்டம் போட்டு, ரவியிடம் நட்பு வளர்க்கலானான்.

ரவியிடம் பேசும் போதெல்லாம், ரவியயை பயங்கரமாக ஏத்தி விடுவான். பாலு அருகேயிருந்து, அதை தவிர்க்க எண்ணும் போது, போதையயை விட மனமில்லாமல், லாலை கூடவே அழைத்துக் கொண்டு சுற்றலானான். பாலு அருகே இல்லாத சமயமாகப் பார்த்து லால், தனது வேலையயை ஆரம்பித்தான்.

"டேய், உனக்குத் தான் செட் ஆகிடுச்சி..எனக்கு ஏண்டா நீ உதவக்கூடாது" என்றான் லால்.

"என்னடா சொல்லுற, நான் என்ன பண்ணனும். நானே இன்னும் சொல்லலை, நீ வேற." என்று அங்கலாய்த்தான் ரவி.

"அதக்குத் தாண்டா சொல்லுறேன்...நீ சொல்லு, அப்படியே என் விசயத்தையும், சேர்த்துச் சொல்லு" என்றான்.

தொடர்ந்து ஓதினான் லால். எறுப்புற கல்லும் தேயுமாமே. கல்லு தேஞ்சுதோ இல்லையோ, ரவி தேய ஆரம்பிச்சான். லால் சொன்னது மண்டைக்குள்ளே அது ஓடிக்கிட்டே இருந்தது. வீட்டிற்குப் போகும் போது, அதைப் பற்றி நினைத்துக் கொண்டே வண்டி ஓட்டிச் சென்றான்.

வீட்டிலே, அவன் படிக்க அமரும் போது அது ஓடிக் கொண்டே இருந்தது. அவனத குடிகளில் ஒருவன் ஒரு கோரிக்கை விடுத்து இருக்கும் போது, அவனால், அதை நிறைவேற்றாமல் இருக்க முடியும்மா. சரி, அதை சொல்லி தான் விடுவோமே. நமக்குத் தான் செட் ஆகிவிட்டதே (?!!) என்று நினைத்தவாறு, ஒரு கோடுப் போட்ட தாளை எடுத்த, தொலைக்காட்சியில், சித்ரஹார் பார்த்துக் கொண்டே, எழுதி முடித்தான்.

என்ன எழுதினான்னு கேட்க நினைக்கிறவங்களுக்கு, அது ரொம்ப பிரைவேட்டா இருக்காது..வேண்டாம் விட்டுடுவோம். அதுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லாதது. ஏன்னா, அது கிழிப்படப் போகுது. நம்ம ரவி கிழிக்கப் போறானா...இல்லை. வேற யாரு...லக்ஷ்மியா..பொறுத்திருங்க.

-வளரும்.

Wednesday, December 19, 2007

மழைக்கஞ்சி

ஒரு பத்து வருசத்துக்கு முந்தியெல்லாம் எங்க ஊருல நல்லா விவசாயம் நடக்கும். காடுகள்ள எல்லாம் பருத்தி, பாசிப்பயறு, தட்டாம்பயறு, மொச்சை இன்னும் வேற வேற விவசாயமெல்லாம் செய்வ்ங்க.

காட்டுல வேல இல்லாதப்ப லச்சுமிப் பாட்டி, ராமக்கா பாட்டி இன்னும் பல பாட்டிகள் எல்லாம் தெருவுக்கு நடுல இருக்குற சச்சண்ணன் டெய்லர் கடை பக்கத்துல இருக்குற வேப்பமரத்து அடியில உக்காந்து அரட்டை அடிச்சுக்கிட்டு இருப்பாங்க..

எதாவது ஒரு பாட்டி மெதுவாப் பேச்ச ஆரம்பிப்பாங்க.. பருத்திச் செடி நல்லா வந்துருக்கு... பூவெல்லாம் நல்லாப் பிடிச்சுருக்கு.. ஒரு மழ வந்தா நல்லா இருக்கும்... செடியெல்லாம் வாட ஆரம்பிக்குதுன்னு..

ஒடனே இன்னொரு பாட்டி இந்த ஞாயத்துக் கெழம மழக் கஞ்சி எடுத்துருவோம்ன்னு ஆரம்பிக்கும்... அப்படியே ரெண்டு பேரு போயி மேலத்தெருல இருக்குற பாட்டிக கூடயும் பேசி முடிவெடுப்பாங்க...அடுத்து தெருல இருக்குற சின்னப் பிள்ளைகள எல்லாம் கூப்பிட்டு சொல்லுவாங்க..

ராமக்கா பாட்டி தலைமைல எல்லாரும் சட்டிய எடுத்துட்டு வீடு வீடாக் போயி கஞ்சி வாங்குவோம்.. அவங்கவங்க வீட்டுல இருக்குற சோறோ இல்ல கம்மங்கஞ்சியோ இல்ல சோளக்கஞ்சியோ தருவாங்க. சில வீடுகள்ல கடிச்சுக்க வத்தலும் தருவாங்க. எங்க தெருவுல ராமக்கா பாட்டி கஞ்சி வாங்குற, அதே நேரத்துல மேலத்தெருல சீதாலட்சுமி பாட்டி தலைமைல இந்த வேலை நடக்கும்

ரெண்டு தெருலயும் சேகரித்து முடிச்சதும், ரெண்டு தெரு ஆளுங்களும் எங்க தெரு முனைல சந்திச்சு, எல்லாரும் சேந்து ஊருக்கு வெளிய இருக்குற வாத்தியார் தோட்டத்துக்குப் போவோம். அந்தத் தோட்டத்துல நடுவுல ஒரு கோயில் இருக்கும். கோயில்ன்னா ஒரு பத்து மஞ்சனத்தி மரங்களும் நடுல நாலு கல்லும் இருக்கும், அதான் கோயில்.

அந்தக் கோயில்ல போயி எல்லாக் கஞ்சியயும் ஒன்னா அண்டால ஊத்தி நல்லாக் கரைப்பாங்க. அதுக்கப்பறம் வரிசைல நிக்கவச்சு எல்லாருக்கும் அந்தக் கஞ்சியும் தொட்டுக்க வத்தல் இல்லைன்னா வெல்லக்கட்டி தருவாங்க.

எனக்கும் சேத்து பக்கத்துவீட்டு காச்செல்வி(கார்த்திகைச் செல்வி.. அவங்கள எல்லாரும் அப்படித் தான் கூப்பிடுவோம்) அக்கா தூக்குவாளில வாங்கி தனியா எனக்குத் தருவாங்க. அந்தக் கஞ்சி ரெம்ப டேஸ்ட்டா இருக்கும்..

அத சாப்பிட்டு முடிச்சதும் எல்லாரும் ஓட ஆரம்பிக்கனும் ஏன்னா பின்னாடி இருந்து பழய செருப்ப எரிய ஆரம்பிப்பாங்க... இதெல்லாம் செஞ்சா மழை வரும்ன்னுறது எங்க ஊர்ல ஐதீகம்..

ஆனா அது எப்படியோ தெரியாது..சரியா மழ வற்றதுக்கு 3 நாள் முன்னாடி மழக்கஞ்சி எடுப்பாங்களோ என்னவோ, 3 நாளக்குள்ள மழை வந்துரும்...

....................................

ம்ம்ம்..... அதெல்லாம் அந்தக்காலம்.

இப்பெல்லாம் எங்க ஊருல யாரும் மழைய எதிர்பாக்குறதும் இல்லை. அதுக்காக மழைக் கஞ்சி எடுக்குறதும் இல்லை... ஏன்னா யாருமே விவசாயம் செய்யுறது இல்லை....

மழைக்கஞ்சி எடுக்குற அந்தத் தோட்டத்த ப்ளாட் போட்டு வித்துட்டாங்க. இப்ப அங்க முழுவதும் வீடு வந்துருச்சு..வீடுகளுக்கு இடையில அந்த கோவில் மட்டும் இன்னும் இருக்குது...

ஊர ஒட்டி இருந்த தோட்டங்கள எல்லாம் ப்ளாட் போட்டு வித்துட்டாங்க... கொஞ்சம் வெளிய இருந்த தோட்டம், காடுகள் எல்லாத்தயும் சிவகாசி மொதலாளிகளுக்கு வித்துட்டாங்க....

காட்டுல வேலை இல்லாதப்ப மட்டும் வேப்ப மரத்தடியில அரட்டை அடிச்ச, ராமக்கா பாட்டியும், லட்சுமிப் பாட்டியும் இப்பெல்லாம் தினமும் அந்த மரத்தடியில தான் உக்காந்து பழய கதையப் பேசிக்கிட்டு இருக்காங்க.
மத்தவங்கெல்லாம் பயராபீசுக்கும், அச்சாபீசுக்கும், தீப்பட்டிஆபீசுக்கும் வேலைக்குப் போறாங்க....
....................................

டிஸ்கி: இது கற்பனை இல்லை!!!

Tuesday, December 18, 2007

சமர்த்து ! (சிறுகதை)

ரஞ்சனியின் வீடு, பெண்பார்க்கும் படலத்தால் களைகட்டியிருந்தது,

"எங்களுக்கும், பையனுக்கும், பொண்ண புடிச்சிபோயிடுத்து மத்த விசயங்களையும், என்னான்னு கேட்டுட்டேள்னா, மேல ஆக வேண்டியத பாத்து, முகூர்த்தத்துக்கு தேதி குறிச்சிடலாம்" என்றாள் ரஞ்சனியை பெண்பார்க்க வந்த மாப்பிள்ளையின் அம்மா.

"ப்பேஷ் சொல்லுங்கோ, எங்களுக்கு இவ இரண்டாவது பொண்ணு, இவளுக்கு எல்லாம் நன்னா செஞ்சு பார்க்கனும் எங்களுக்கும் ஆசைதான்" என்றேன்

மாப்பிள்ளையின் அம்மா மெதுவாக ஆரம்பித்தாள்,

"இங்க பாருங்கோ சம்பந்தி, என்ன அதுக்குள்ள சம்பந்தின்னு கூப்பிடராளேன்னு தப்பா நினெச்சிடாதேள், நாங்க விஜாரிச்சதில, உங்க ஆத்தப்பத்தி எல்லோரும் நன்னாதான் அபிப்ராயம் சொல்றா ..."

நானும் அமைதியாக ஆமோதித்து,

"எங்க முப்பாட்டனார், தோப்பனார் வரைக்கும் ஐஸ்வரியமா வாழ்ந்தவா தான் எங்க பேமிலி, எங்க தோப்பனார் பேரச்சொல்றச்ச, கேட்கிறவா கையெடுத்து கும்பிடுவா, இப்பதான் கொஞ்சம் நொடுச்சி போய்டோம், ஆனா பொண்ண டிகிரி வரைக்கும் படிக்கவெச்சிருக்கோம்" என்றேன்

மாப்பிள்ளையின் அம்மா உடனே,

"அதெல்லாம் நேக்கு நன்னா தெரியும், எங்காத்துக்குன்னு பாரம்பர்யம், கவுரவம் எல்லாம் இருக்கு..."

"அந்த காலத்தில நான் மாட்டுப் பொண்ணா போறச்ச என் தோப்பனார் நூறு சவரனுக்கு குறையாமல் செஞ்சார்..."

"நாங்க அவ்வளவெல்லாம் கேட்கல, ஒரு ஐம்பது சவரனும் நகையும், பையனுக்கு மாருதிக்காரும், கொஞ்சம் வெள்ளிப்பாத்திரமும் வாங்கிக் கொடுத்திட்டேள்னா போதும்..."

சம்பந்தி அம்மாதான் எல்லாவற்றையும் பேசினாள், அவ ஆம்படையான் எல்லாத்தையும் ஆமோதிப்போல் தலையாட்டி கொண்டிருந்தார், கூட்டிக் கழித்துப் பேசுவதை அவர்கள் விரும்பவும் இல்லை. முடிவாக,

"அப்ப நாங்க வர்ரோம், ஒருவாரத்துக்குள்ள, சட்டுன்னு தரகர்கிட்ட உங்க முடிவ சொல்லி அனுப்புங்க"
என்று எழுந்து சென்றார்கள் மாப்பிள்ளை ஆத்துக்காரார்கள்.

"ஏண்ணா, என்ன சொல்லப்போறேள், அவா பாட்டுக்கு நெறையா நீட்டிண்டே போனாளே" என்றாள் என் மனைவி ருக்கு

"மாப்ள ஆத்துக்காரவா, அப்படிதான் கேட்பா..." என்ற நான்,

"எதுக்கும், நம்ப பொண்ணு ரஞ்சனிக்கிட்ட ஒருவார்த்தை கேட்டுடலாம், அவ என்ன சொல்லப் போறாளோ" என்று சொல்லிவிட்டு

"ரஞ்சனி இங்க வாடி" என்று கூப்பிட்டேன்

"கொஞ்சம் இருங்கோ, ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடுரேன்..."

"இதோ வந்துட்டேன் ப்பா, ம்.. சொல்லுங்கப்பா"

"ஏன்டி, நோக்கு இந்த வரணை புடிச்சிருக்கா ?"

"நேக்கு புடிச்சிருக்குப்பா"

"ஏன்டி, நோக்கு தெரியுமோன்னோ, அவா வரதட்சணை விசயத்தில ரொம்ம கராறா இருக்கா" என்றாள் ருக்கு

"அவள விடேண்டி, அவதான் புடிச்சுருக்குன்னு சொல்றாள்ளே, இந்த வரனையே முடிச்சிட்டா போறது" என்றேன்

"ரஞ்சனி, அவா கேட்டது, நேக்கு ரொம்ம அதிகம்னு பட்றது, அப்பறம் உன்பாடு, உன் தோப்பனார் பாடு" என்றாள் ருக்கு

"அம்மா, அப்பாதான் அவா பேமிலி போக்ரவுன்ட நன்னா விசாரிச்சிட்டுதானே, வந்து பாக்க சொன்னார்"

ரஞ்சனி புத்திசாலி, எதையும் விட்டுக் கொடுக்காதவ, எப்பவும் தெளிவா முடிவெடுப்பாள், மூத்தவளைவிட சாமார்த்தியசாலி, சம்பந்தியம்மா விடாப்பிடியாக வரதட்சணை பேசியது தெரிந்தும் இவள் இந்த வரனையே முடிச்சிடலாம்னு சொன்னது, எனக்கு மட்டும் ஆச்சர்யமாக இருந்தது

"ஏண்டி அவா பேசுனத வச்சி அவா மேல உனக்கு தப்பானா அபிப்ராயம் வந்துடலையா?, நிஜமா சொல்லு அவாள நோக்கு பிடிச்சிருக்கா"

"அப்பா, நன்னா யோசிச்சிதான், நான் முடிவு பண்ணினேன் ..." மேலும் தயக்கமாக,

"அப்பா, நீங்க ஒரு விசயத்தை மறந்திட்டேள், விஜி அக்காவோட அத்திம்பேர் ஆத்தவா, சீர் எதுவும் செய்யவேண்டாம்னு பெரும்தன்மையா விஜியை கட்டிண்டு போனாளே கடைசியல என்னாச்சு"

"ஆமாண்டி, அதை ஏன் சொல்லற ? நான் அப்படி ஒன்னும் வெறும்கையா கட்டிக் கொடுக்கலையே ஓரளவுக்கு நம்ப விஜிக்கு போட்டுதானே அனுப்பினேன்" என்றேன் நான்

"அப்படியும் பின்னாடி, அவா உங்கள விட்டாள ? அத்திம்பேருக்கு பிஸ்னஸ்ல நஷ்டம் ஆனச்ச, அவ மாமியார், நம்ப விஜி வெறும் கையோடு வந்தாள்னு குத்தி குத்தி காமிச்சாளா இல்லையா? "

"ஆமாண்டி, விஜி கண்ண கசக்கிண்டு வந்து நின்னா"

"என் ஆத்துக்காரர் கஷ்டப்படுறார்'னு அவ நம்ம ஆத்தில இரண்டு மாசம் தங்கிட்டா, அப்புறம் உங்க ரிடையர் பணத்தை தொடச்சி, ஐஞ்சு லட்சம் கொடுத்தேளே மறந்திட்டேளா ..." மேலும் தெளிவாக சொன்னாள்,

"ஒன்னும் வேணான்னு சொல்லிண்டு, பின்னாடி பிடுங்கிறவாள விட, இவா நேரடியா கேட்டது நல்லதுன்னு நேக்கு படறது..."

"ஏன்டி, ரஞ்சனி அவா கேட்டதெல்லாம் செய்யறத்துக்கு உன் தோப்பனார் எங்கடி போவார்" என்றாள் ருக்கு

"இதபாருடி ருக்கு, இவள கட்டிகொடுத்துட்ட பின்னாடி, இவ்வளவு பெரிய ஆத்தக் கட்டிண்டு, நாம என்ன செய்ய போறோம்..."

"இத வித்து, இவ கல்யாணத்தை முடிச்சிட்டு மிச்சம் இருக்கறத வெச்சு ஒரு வாடகை ஆத்துல நம்ம காலத்த ஓட்டிட்டா போறது"

"சரிங்கோண்ணா, எதோ பாத்து செய்யுங்கோ" என்றாள் ருக்கு

"அப்பா, நான் தெளிவாதான் இருக்கேன், அவாள பாக்கறத்துக்கும் நல்ல மனுசாளாத்தான் தெரியறது..."

"அதுக்குமேல எதாவது ஒன்னுன்னா நானே பாத்துப்பேன், நான் ஒன்னும் நம்ப விஜிமாதிரி தலையாட்டிண்டு, எல்லாத்தையும் கேட்டுண்டு இருக்கமாட்டேன்" என்றாள் ரஞ்சனி

ரஞ்சனி இவ்வளவு தெளிவா பேசுகிறாளே என்று வியந்து வாயைப் பிளந்தேன்

"ரஞ்சனி எம் பொண்ணாக்கும் சமர்த்து..., நீ சொல்லறது சரின்னுதான் பட்றது, சாயங்காலமே, தரகர் மாமா கிட்ட பேசி, சம்மதன்னு சொல்லச் சொல்லிடுறேன்"

"அவா வரதட்சணையில பிடிவாதமா இருக்காளே, உன்னெ நன்னா பாத்துப்பாளான்னு. நேக்கு சந்தேகம் அதான் கொஞ்சம் யோசிச்சேன்" என்றாள் ருக்கு

"இப்ப இருக்கிற பெரியவாளைவிட சின்னவாவெள்ளாம் தெளிவாதான் இருக்கா... அவாளிடம் யோஜனை கேட்டால் தான் சரிவர்றது..."

"நல்லதா நடந்தா சரிண்ணா...பகவான் மேல பாரத்தைப் போட்டுற வேண்டியதுதான்"

"பகவான் இருக்கார் அவர் பாத்துப்பார்...இன்னிக்கு நம்மாத்து நரசூஸ் காஃபி பிரமாதம் ... இன்னும் ஒரு கப் கொண்டுவாடி ருக்கு.."

'அப்பாடா...' ஒருக்கிற ஒரே பெரிய பாரம் குறையப் போகிற திருப்தியில் நேக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

பின்குறிப்பு : கதையில் வரும் பாத்திரங்கள், வரதட்சனை, ஐயராத்து டயலாக் எல்லாம் கற்பனையே.

Monday, December 17, 2007

"பில்லா ? போதும் நிறுத்துங்க...!"

பெண்பார்க்கும் படலம் முடிந்தது,

பெண்ணின் அப்பா பெரியசாமி தரகரை கிட்டே அழைத்து மெதுவாக கேட்டார்,

"தங்கசாமி சார்...மாப்பிள்ளை வீட்டில் என்ன சொல்றாங்க...?"

"அது வந்து........பொண்ணு கொஞ்சம் கருப்பாக இருக்கிறதாம்..." - தரகர்

"அதைத்தான் ஏற்கனவே சொல்லி இருக்கோம்மே...எதையும் மறைக்கலையே..."

"அது இல்லே...அது வந்து...அவுங்க இன்னும் கொஞ்சம் பத்து சவரன் நகை போடனும் என்று எதிர்பார்க்கிறாங்க"

"பிஸ்னஸ் கொஞ்சம் டல்லாக இருக்கு முடிஞ்சதைச் செய்வோம் என்று ஏற்கனவே பேசியதுதானே...அதெல்லாம் தெரிஞ்சுதானே பார்க்க வந்திருக்காங்க...பத்துபவுன் நகைப் போட்டால் கருப்பாக இருந்தாலும் பரவாயில்லையாமாம் ?"

"அப்பா நமக்கு இந்த சம்பந்தம் வேண்டாம்பா..." அறையில் இருந்து கண்களால் பேசினாள் சகுந்தலா.

"என்னை மன்னிச்சிடுங்கோ...நானும் பேசிப்பார்த்தேன் பிடிக் கொடுக்கலை..."

கோபமானர் பெரியசாமி,

"என்னதான்யே ...சாரி...என்ன சொல்றாங்க...?"

"போய் லெட்டர் போடுறாங்களாம்...?"

"எந்த உலகத்தில் இருக்கிறீர் நீர்...லட்டரா ? இமெயில்..எஸ்எம்எஸ் எல்லாம் வந்துட்டு லட்டர் போடுறாங்களாம்..."

"......"

"வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாங்க...நகைப்போட்டால் வேண்டாவெறுப்பாக கட்டிக் கிறாங்களா ?"

"......"

"என்னை என்ன பண்ணச் சொல்றிங்க..."

"உங்களை ஒண்ணே ஒண்ணு பண்ணச் சொல்றேன்..."

"சொல்லுங்கோ..."

"கேசரி, காப்பி, வடையெல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லிச் சொல்லி கேட்டு வாங்கி சாப்பிட்டாங்களே..."

"....ம்ம்...."

"நீங்க சாப்பிட்டதற்கும் சேர்த்து பில்லை செட்டில் பண்ணிட்டு போகச் சொல்லு...என் பொண்ணுக்கு ஆயிரம் சம்பந்தம் கிடைக்கும்.

"பில்லா ? போதும் நிறுத்துங்க..." அதிர்சியுடன் அவரைப் பார்த்து கேட்டார் தரகர்

"ஆமாய்யா...சாரி ஆமாங்க...நான் ஓட்டல் முதலாளி ... எங்க கடை சுவையை கேள்விப்பட்டு ஓசியில் சாப்பிட வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்... ஓசியில் டிபன் காப்பி கொடுக்க முடியாது... சாப்பிட்டதற்கு செட்டில் பண்ணிட்டு போச்சொல்லுங்க..."

'கஞ்சபிசிநாறிக்கு தரகனாக போனதற்கு என்னைச் சொல்லனும்' ஓட்டல் காரரின் இயலாமை குறித்து வருத்தம் எதுமின்று தனக்குள் நொந்து கொண்டார் தரகர் தங்கசாமி.

----------------------------------------------------------------
'எருது நோவு காக்கை அறியாது' - இது கதை வழி சொலும் மெசேஜ்.

பின்குறிப்பு : தலைப்பை ஒட்டி கதை எழுதியாச்சு....கதையில் வரும் பாத்திரங்கள் தட்டுமுட்டு சாமான்கள் அனைத்தும் கற்பனையே.

Sunday, December 16, 2007

நஒக : தத்து ( போட்டிக்கு அல்ல...பொறாமைக்கு..)

ஜெகதீசன் புவனா தம்பதிகள், மிகுந்த கவலையுடன் மருத்துவர் முன்பு உட்கார்ந்திருந்தார்கள்,

அவர்களின் செல்லக்குட்டி ஐஸ்வரியா அவர்கள் முகத்தைப் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது.

எற்கனவே வீட்டில் ஆண் ஓன்று பெண் ஒன்று என இரண்டு.. இருக்கு இப்போது ஸ்கேன் பண்ணிப் பார்த்தால்

வயிற்றில் மூன்று இருப்பதாக சொல்கிறார்.

"டாக்டர்..இதை எப்படியாவது ..."

"இதுக்கு மேல் பேசாதிங்க...அதெல்லாம் ஒன்னும் பண்ணமுடியாது""

கணவனைப் பார்த்தாள் புவனா,

அவனும் உதட்டைப் பிதுக்கினான்

மருத்துவ மனையை விட்டு வெளியில் வந்தார்கள்

"இரண்டு போதுங்க..."

"ஆமாம் புவனா...நம்ம வருமானம் இதுக்கு மேல் வளர்க்க கட்டுப்படியாகாது..."

"என்னதான் செய்றது..எங்காவது குப்பைத் தொட்டியில்..."

அவள் வாயைப் பொத்தினான்,

"கஷ்டமாகத்தான் இருக்கு...இருந்தாலும் யோசனைப்பண்ணிப் பார்த்தேன்..."

"சொல்லுங்க..."

"நம்ம அரவிந்த்...இருக்கானே...என்னோட ப்ரெண்ட்...அவனுக்கு தத்து கொடுத்துடலாமா ..."

"நல்ல யோசனையாக இருக்கு...அப்படியே உங்க நண்பர்கள் யாரும் கேட்டால் கொடுத்துடலாம்...தெரிஞ்ச எடத்தில் கொடுத்தால் தான் நாம அவ்வப்போது சென்று பார்த்து மகிழலாம்"

என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாமல் அவர்கள் காலை நக்கியதும், தூரத்தில் ஒரு நாயின் குறைப்பைக் கேட்டு பலமான குரைப்பாக "லொள்" என்றது மீண்டும் மூன்று குட்டிகளுக்கு தாயாகப் போகும் ஐஸ்வரியா.

பின்குறிப்பு : இந்த கதையில் வரும் பாத்திரங்கள், பால் பாட்டில், தண்ணீர் டம்ளர், பூஜை அறை அனைத்தும் கற்பனையே...குறிபிட்டுள்ள சம்பவங்கள் குண்டுவெடிப்பையோ , தீபாவளியையோ குறித்ததல்ல.

இளம் ஜோடி - நஒக போட்டிக்கு அல்ல!

அவருக்கு சில நாட்களாகவே அந்தப் பிரச்சனை இருக்கிறது. ஆனால் யாருக்கும் தெரியாது. இது யாருக்காவது தெரிந்தால் சமூகத்தில் அவருக்கு இருக்கும் மதிப்பு என்னாகுமோ என்று மிகவும் பயப்படுகிறார்.

நேற்று கூட இப்படித்தான், திடீரென கை, கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அந்தப் பிரச்சனை வந்தால் உடனே "அந்த" வேலையை முடிக்க வேண்டும் இல்லையென்றால் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடுகிறது. வேறு எதுவுமே யோசிக்க முடிவதில்லை...

அப்பாடா இன்று வெள்ளிக்கிழமை ஆயிற்று.. சனி, ஞாயிறு இரு நாட்களும் குறைந்தது இரண்டு முறையாவது 'அந்த' வேலையைச் செய்து விடலாம் என்று மிகவும் சந்தோசமாக இருந்தது அவருக்கு. ஆனால் வீட்டுக்குப் போனதும் ஒரு இடி காத்துக்கொண்டு இருந்தது..

"என்னங்க பாப்பா நாளைக்கு sentosa போகனும் ன்னு சொல்லுறாங்க. கூட்டீட்டுப் போகலாம்" என்று அவர் வீட்டுக்குச் சென்றதும் மனைவி கேட்டார். அவரால் மறுக்க முடியவில்லை. மறுத்தால் மனைவிக்குத் தெரிந்துவிடுமே.. அப்புறம் அவ்வளவுதான்.

ஆனால் அவருக்கு பயமாக இருந்தது ஒரு நாள் முழுவதும் தாங்க முடியுமா என்று.. ஆனால் முயன்று பார்க்கலாம் என்று நினைத்தார்.

மறுநாள் காலையில் M.R.T யில் செல்வதாக முடிவெடுத்து M.R.T யில் சென்றனர். ஒரு மணி நேரம் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. மவுண்ட் பேபர் சென்று அங்கிருந்து கேபிள் காரில் செல்ல முடிவெடுத்தனர்.

மவுண்ட் பேவரில் ஒரு நாயைப் பார்த்ததும் அவருக்கு "அந்த" நினைப்பு வந்துவிட்டது.. கை கால் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது.. தனியாகச் சென்று ஒரு தம் இழுத்து கொஞ்சம் மனதை மாற்றி விட்டு வந்தார்...

அடுத்து sentosa சென்ற பின் மாலை வரை சுற்றிப் பார்த்தனர். அது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. அவருக்கே சந்தோசமாக இருந்தது அவரால் அதைச் செய்யாமல் ஒரு நாள் முழுவதும் இருக்க முடியும் என....

அப்போது தான் பார்த்தார் அந்த கைகோர்த்துச் சென்ற அந்த இளம் ஜோடியை.. மீண்டும் அவருக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. மனைவியிடம் உடனே கிளம்பச் சொல்லி வீட்டுக்குக் கிளம்பிவிட்டனர்...

"இனி வீட்டில் போய் சமைக்க முடியாது, இங்கேயே சாபபிட்டுவிடலாம்" என்று மனைவி சொன்னதை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டார்.. அவரால் சாப்பிடக்கூட முடியவில்லை.. ஒருவழியாக சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்..

ஏற்கனவே தூங்க ஆரம்பித்திருந்த அவரது மகளை உள்ளே எடுத்துச் சென்று மனைவியும் மகளுடன் சேர்ந்து தூங்க ஆரம்பித்தார்..

அது வரை காத்திருந்த அவர் லேப்டாப்பைத் திறந்து ப்ளாக்கருக்குள் நுழைந்தார். "அந்த இளம் ஜோடி கை கோர்த்து...." என்று "நஒக - இளம் ஜோடி(adults only)" என்ற தலைப்பில் கதை எழுத ஆரம்பித்தார்.

ஆம்... இப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு இரண்டு "நச்சென்று ஒரு சிறுகதை"யாவது எழுதவில்லை என்றால் கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடுகிறது.... யாருக்காவது இதற்கு ஏதாவது வைத்தியம் தெரியுமா???

பின்குறிப்பு:
இந்தக் கதை முழுவதும் கற்பனையே... இதில் வரும் "அவர்" கதாப்பாத்திரம் எந்தப் பதிவரையும் குறிப்பதல்ல....


இந்தக் கதை யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.... சிரிப்பதற்காக மட்டுமே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thursday, December 13, 2007

ABC 9898

முன் குறிப்பு:
இந்தக் கதை மற்றும் கதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே...
(நன்றி: அரசி தொடர்)

அத்தியாயம்1 :கதாபாத்திரங்கள் அறிமுகம்:


வள்ளல்.முரசு:

இவர் தான் இந்தக் கதையின் நாயகன். சிங்கப்பூர்ல வேலை செய்யுறார். சாப்ட்வேர் எஞ்சினீயர். பேர்போன பதிவர்.
இவருக்கு "ஃபீல்டு" அனுபவம் ரெம்ப அதிகம்......
P.C.ஸ்ரீராம்ன்னு நினைப்பு.. எந்த நேரமும் கேமராவோட தான் இருப்பார்... வீடியோ எடுத்துத் தள்ளுவார்... ஆனா ஒன்னையுமே ரிலீஸ் பண்ணமாட்டார்.. கேட்டா எடிட்டிங் வேலை இருக்குன்னு சொல்லுவார்.(வருசக் கணக்கா எடிட் பண்ணுவார்)...

ஆவி.மன்னன்:
(இந்தப் பெயரைப் பார்த்து இவரின் சாதி கண்டுபிடிக்க யாரும் முயல மாட்டார்கள் என நம்புகிறேன்...)
இவர் மூத்த பதிவர்... இவருக்கு ஜெயகாந்தன் ன்னு நினைப்பு... நச்சு நச்சுன்னு கதை எழுதித் தள்ளுவார்...
இந்தக் கதையில் இவர் முக்கிய கதாபாத்திரம்....
இவரும் சிங்கையில் வேலை செய்யுறார்..

ABCD
இவரும் பதிவர் தான்.... வித்தியாசமாப் பேர் வைக்கனும்ன்னு இப்படி வச்சிருக்கார்... இதுக்கு விரிவு ஏதோ "....கன்ப்பியூஸ்டு திராவிடனாம்"
இவர் இப்பத்தான் கொஞ்ச கொஞ்சமா பிரபலம் ஆயிட்டு இருக்கார்.
இவர் மலேசியாவில் பினாங்கில் வேலை செய்யுறார்...

ஈசன்:
இவன் இந்தக் கதையில் உப்புக்குச் சப்பானி...
இவனும் "பதிவர்" என்ற பெயரில் ஏதாவது கிறுக்கிக்கொண்டு இருப்பான்.
சிங்கையில் வேலை செய்யுறான்...
இந்தக் கதையை இனி உங்களுக்கு சொல்லப் போவது இவன் தான்.......

கதைச் சுருக்கம்:
சிங்கைப் பதிவர்கள் மூன்று பேரும் ABCD யை சந்திக்க பினாங்கு போனதும் அங்கு 4 பேரும் சேர்ந்து செய்த லூட்டிகளும் தான் இந்தக் கதை....

அடுத்த அத்தியாயம்:
அத்தியாயம் 2:ஜோகூர்- மூத்த பதிவர்களுக்கு ஓய்வு கொடுங்கள். இளைஞர்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்...

விரைவில் எதிர்பாருங்கள்....

தொடரும்...

நான் அந்த சாதி...நீ எந்த சாதி..

மேற்படிப்பு படிக்கலாம் என்று முடிவெடுத்து எம்.பி.ஏ படிக்கலாம் என்று அதற்கு தயாராக்கும் வகுப்பில் சேர்ந்தேன். வகுப்பிலே நான் சேரும் பொழுது வகுப்பு ஆரம்பித்து ஏற்கனவே சில நாட்கள் ஆகிவிட்டியிருந்தன. நான் போய் அமரும் போது வகுப்பு ஏற்கனவே ஆரம்பித்து நடந்துக் கொண்டிருந்தது.

சரி..கூடப்படிக்கும் நபர்களில் ஒருவரைப் பிடித்து விட்டுப் போன பாடங்களை கற்றுக் கொள்ளலாம் என்று நான் நினைத்துக் கொண்டியிருக்கும் போது, தான் அவன் வந்தான். அவனைப் பார்த்தாலே தெரிந்தது அவனும் தமிழன் என்று. இந்தப் பாழாய்ப் போன பெங்களூரிலே, தமிழனைக் கண்டாலே நமக்கு உடனே பேசி ஆகனும்மே.அவனும் அதுக்கு ஏத்தா மாதிரி, வந்தான்..கையயைக் கொடுத்தான். "ராஜ கோபால்" என்று அறிமுகப்படுதிக்க் கொண்டான். நானும் உடனே ராஜு என்று கைக் கொடுத்தேன். அந்த வகுப்பிலே நாங்கள் மட்டுமே தமிழர்கள். மற்றவர்கள் கர்நாடகம், ஆந்திரா, பெங்கால் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

கணித வகுப்பாசிரியர் ரொம்ப நல்லா பாடம் நடத்திக் கொண்டிருந்தார். எனக்குத் தான் எதுவும் புரியவில்லை. "ரொம்ப நாளாகிடுச்சு...டச்சு விட்டுப் போச்சு", என்றேன். "ஆமாம், எனக்குக் கூட எதுவும் சரியாக விளங்கவில்லை." என்று ஆமோதித்தான். வகுப்பு முடிவடைந்தது. அப்படியே பரஸ்பரம் அலுவலக பின் புலன்களை பரிமாறிக் கொண்டோம். அடுத்த வகுப்பு ஆங்கிலம் என்று கையேடு சொன்னது.

ஆங்கில ஆசிரியயை வந்தார். வந்தவுடனே, அவர் கற்றுத் தரும் பாடம் அன்று தான் ஆரம்பம் போலிருக்கிறது. வந்தவுடன் அறிமுகப்படலம் ஆரம்பித்தது. அவர் " என் பெயர் லலிதா மகாதேவன்" என்று சொல்லிவிட்டு.." உங்களை அறிமுகப்படுத்திக்கோங்க..." என்றார். அனைவரும் ஒரு முறை அறிமுகம் செய்து விட்டுப் பாடத்தை கவணிக்க ஆயுத்தம் ஆனோம்.

பாடம் நடத்தினார். வகுப்பும் முடிந்தது. முடிவில், அவ்ர் , "உங்கள் அனைவருக்கும், உதவும் என்றால், இதற்கு முன்னர், இந்த ஜி.மேட் பரிட்சையிலே வெற்றிகரமாக எழுதி 860/1000 எடுத்த என் மகனின் மின்னஞ்சல் தருகிறேன் வேண்டும் என்றால், தொடர்பு கொண்டு, அவனினி ஆலோசனைகளை நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். என்று கூறினார்.

இந்த தேர்விலே வெற்றிப் பெற, வெற்றி பெற்றவர்களின் ஆலோசனை பெரிதும் உதவும் என்பதால், அனைவருமே அந்த முகவரியயைப் பெற ஆவலாயிருந்தோம். அவரும் அந்த கரும்பலகையிலே " அருன் ஐயர் @ ஜிமெயில்.காம்" என்று எழுதிப் போட்டார்.

அது வரையிலே அமைதியாக இருந்த நம்ம நன்பர், சுறுசுறுப்பாக ஆகிவிட்டார். " ஓ..நீங்கள் ஐயரா..தமிழ் ஐயர்கள் என்றாலே, அறிவு கூர்ந்தவர்கள் என்று உலகத்திற்கே தெரியும்மே..உங்கள் மகன் வெற்றி பெற்றதிலெ, ஆச்சர்யமே இல்லை", என்று அவர் கூசும் அளவிற்கு புகழ்ந்துவிட்டு, என்னிடம் திரும்பி " என்ன சொல்லுறீங்க" கேட்டான்.

எனக்கோ கடுப்பாக இருந்தது. எனக்கு அப்படி "ஜிங்க ஜாக்" தட்டி பழக்கமில்லாததால், அதை கவணியாததுப் போல் இருந்தேன். வகுப்பு முடிந்தவுடன், தமிழர்கள் என்பதால் சரி சேர்ந்தேப் போகலாம் என்று எண்ணி, முன்னறையிலே சில விவரங்கள் வினவி விட்டு, ஒன்றாக உயர்த்தியிலே கீழே சென்றோம்.

கீழே சென்ற உடனே மீண்டும் ஆரம்பித்தான், அந்தம்மா பையன் மார்க்கைப் பார்த்தீங்களா..அவங்க அவங்க தான்..என்ன சொல்லுறீங்க என்று மீண்டும் ஆரம்பித்தான். எனக்கு அப்படியே பத்திக் கொண்டு வந்தது. ஏன்..இப்படி சாதி சாதி என்று அலைகிறான் இவன் என்று. அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. பேச்சின் ஊடே, "நான் முதலியார் நீங்க என்ன சாதி". எனக்கு பற்றிக் கொண்டு வந்தது.

நான் அப்படியே பேச்சை மாற்றி வேற பேச தொடங்கினேன். அவனும் அதை விட்டுவிட்டு என் பேச்சில் தொடர்ந்தான். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு கிளம்பினோம். அடுத்த நாள் வகுப்பு முடிந்து வரும் போது மீண்டும், அவன் ஆரம்பித்தான். ஆனால், வேறு வழிமுறையிலே.

ரா: " நீங்க எந்த ஊரு.." ...( கிராமம் என்றால், மிகுதியாக இருக்கும் சாதிகளை வச்சி நெருங்கிவிடலாம் என்று எண்ணி கேட்கிறான்)

நான் : மதுரை.

ரா: உங்கப்பா பேரு...( அவர் பேருல சாதி அடையாளத்தை தேடலாம் என்று ..)

நா : ராமசாமி ரெட்டியார்

ரா: ஓ நீங்க ரெட்டியாரா..

நா : அவசரப்படாதீங்க..எங்கண்ணன் பேரு...கண்ணன் வாண்டையார்

ரா : அதெப்பாடி...ரெட்டியார், வாண்டையார்..

நா: தெரிஞ்சிக்கனுமின்னு கேட்டீங்க..அதுனாலே சொல்லுறேன்...எங்க அக்கா பேரு...செல்வ மீணாள்

ரா: அது நாட்டுக் கோட்டைச் செட்டியார் பேராச்சே...

நா: எங்கம்மா பேரு சொல்லவா....துலுக்க நாச்சியார்

ரா: என்னதுங்க உங்க குடும்பம் இப்படி இருக்கு...

நா : ஆமாம் அப்படித் தான்..

ரா: நானும் எப்படியாச்சும் உங்க சாதி தெரிஞ்சிக்கலாமின்னுப் பார்த்தா விட மாட்டேங்கிறீங்களே.. அப்படி சொல்ல முடியாதபடி என்ன சாதி. அப்ப நீங்க என்ன எஸ்.சியா.

நா: எஸ்.சின்னா உங்களுக்கு இழப்பமா...அவனும் மனுசன் தான். அப்படித் தான் வச்சிக்கோங்க.

ரா : நீங்க என்ன இப்படி பேசுறீங்க...நான் அப்படி என்ன கேட்டேன்...சாதி என்ன என்று தானே கேட்டேன்.

நா: அப்படி நான் என்ன சொல்லிட்டேன்...உங்களுக்கு அது அவசியமில்லாதது என்று தானே சொன்னேன்.

ரா: சரி..எப்படியும் நாம் 3 மாசம் சேர்ந்து தான் படிக்கப் போறோம். அதுக்குள்ள உங்க சாதி என்ன என்று நான் கண்டுப்பிடிக்கிறேன். ஆதரப் பூர்வமா ...என்ன பந்தயம்

அவனின் உறுதியயைக் கண்டு அசராமல், " கண்டுப்பிடிச்சுக் காட்டுங்க...பார்ப்போம்..முடியலையின்னா என்ன தர்ரீங்க.." என்று கேட்டேன். அவன் கையில் இருந்த அந்த 02 கைப்பேசியயைப் பார்த்தான்.."இதை நான் உனக்கு தந்துவிடுகிறேன்" என்றான்.

சிறிது நேரம் கழித்து இருவரும் விடைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம். அவன் சொல்லிச் சென்றது எனக்கு மண்டையிலே ஓடிக் கொண்டேயிருந்தது. எப்படியும் வெற்றி எனக்குத் தான் என்று சொல்லி மணம் துள்ளிக் குதித்தது...

எப்படி என்று கேட்கிறீர்களா...?

நான் தான் அனாதை விடுதியில் வளர்ந்தவனாச்சே..எனக்கே என் சாதி தெரியாதே...இவன் எப்படி கண்டுப்பிடிப்பான்.

அந்த 02 மேன்வல் வாங்கி எப்படி உபயோகிப்பது என்று பார்க்கனும்...உங்க கிட்ட இருக்கா...

பி.கு:-
1.இந்த கதையிலே வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் உன்மையே.. கதைக்காக சிறிது மாற்றி எழுதப்பட்ட உன்மைச் சம்பவம்
2.இது சர்வேசனின் போட்டிக்காக எழுதப்பட்டது. Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!: 'நச்சுனு ஒரு கதை' - போட்டியும், இதுவரை ஆட்டையில் உள்ள 14 பதிவர்களும்

Tuesday, December 11, 2007

நீ அவனே தான்...!

மாடல் அழகியாக ஆகி இருக்க வேண்டியது, நடக்கல. ஸ்கூட்டி ஓட்டத் தெரியாது, பேருந்தில் செல்லவும் பிடிக்காது என்ன செய்வது, இன்னும் டிரைவிங் கற்றுக் கொள்ளவில்லை, எனவே ஆட்டோவில் தான் அலுவலகம் சென்று வந்தாள் ரிஷிகா அதனால் எந்த விளம்பர பட இயக்குனரின் கண்களிலும் இவள் கண்கள் பட்டுவிடவில்லை. அதனால் முதல்வரியை திரும்ப படிங்க.

கன்னிகா அது போல் இல்லாவிட்டாலும் அழகிய இதழ்கள், எள்ளுப்பூ நாசி ( யப்பா அடிக்க வர்றாதீங்க) பார்பதற்கு சுமாராக இருந்தாலும் சூப்பர் அழகியாகத்தான் தன்னை நினைத்துக் கொள்வாள். இரண்டு பேரும் ஒரே அலுவலகம் தான். ஒருவருக்கொருவர் ஓரளவு பொறாமை இருப்பது அவர்கள் சொல்லாடலில் தெரியும், நீ வா போ என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு ஓரளவு தோழிகள் தான்.

"ஹேவ் யூ சீன் பருத்தி வீரன்" - ரிஷிகாவிடம் கன்னிகா கேட்டாள்

"ஓ நோ ஐடோண்ட் லைக் தமிழ் மூவி..." - ரிஷிகா

"தென்.." - கன்னிகா

"எய்தர் இங்கிலீஸ் ஆர் ஹிந்தி மூவி"

போரடித்ததோ என்னவோ தமிழுக்கு தாவினார்கள்

'ரொம்பதான் அலடிக்காதே...தமிழ்படங்கள் கூட அருமையாகத்தான் இருக்கு...'

'...பச்...இருக்கட்டுமே...எனக்கு பிடிக்கலை..."

அவளை எதாவது வாரிவிடவேண்டும்...என்பதற்காகவே கன்னிகா...

'மூன்று நாட்களுக்குள் சிகப்பழகா ...?"

உடனை மேசை டிராயரைத் திறந்து கைப்பையில் இருந்த கண்ணாடியை எடுத்து முகம் பார்த்துவிட்டு

முகத்தைப் பார்த்து...மேக்கப் சரிசெய்து கொண்டாள்.. முறைத்துவிட்டு

'நீ கூடத்தான் ரத்தம் குடித்தது போல் லிப்டிக் போட்டுட்டு வந்திருக்கே...'

'ஓகே...ஓகே....'

இருவரும் சமாதானம் ஆனார்கள்.

'ஏய்ய்...ரிஷிகா அங்க பார்ரேன்...'

'என்னது ?'

'நாம பேசுறதை தலையை சாய்ச்சு வச்சி ஒட்டுக் கேட்டுகிட்டு இருக்கிறதை...'

'என்னது யார் ? ...கேட்டா என்ன ?'

'வேறு யார் மங்களூர் சிவாதான்...அவன் கேட்டுட்டு சும்மா இருப்பானா ?'

'என்ன செய்வானாம்...'

'ப்ளாகில போய் ...நாம இரண்டு பேரும் அவனை சுத்தி சுத்தி வர்றதாவும்...அவனை நெனச்சி கனவு காணுறதாவும் மாற்றிச் சொல்லுவாண்டி'

'ஓ அப்படியா சங்கதி..அப்ப இரு ஒண்ணு பண்ணுவோம்...'

மேசையின் மேல் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து...

சிவாவின் டேபிளுக்கு சென்றாள்

வழக்கம் போல் தூங்குவது போல் பாசாங்குடன் இருக்கிறான் என்று நினைத்து... தலையில் ஊற்றினாள்

நிஜமாகவே தூங்கி இருப்பான் போல...திடுக்கிட்டு எழுந்து

முதலில் கோபமானாலும், பின்பு அசடு வழிந்து

'நேற்று 2 மணி வரை அலுவலகத்தில் ஆணி புடுங்கினேன்...அதுதான் நிஜமாகவே தூங்கிட்டேன்'

'சாரி...சிவா....ஒரு பாட்டில் தண்ணீர் வேஸ்ட் ஆகிட்டுதே...' என்றால் ரிஷிகா

கன்னிகாவும் அவள் பங்குக்கு,
'சிவா நீ தூக்கத்தை கண்டினியு பண்ணு...இல்லாட்டி நாளைக்கு ப்ளாக்குக்கு கதை கிடைக்காது'

இவன் திருந்த மாட்டாண்டி நாம இடத்துக்கு போகலாம்...இருவரும் சிரித்துவிட்டு அங்கிருந்து நகன்றனர்

தூக்கம் கலைந்துவிட்டது, இனி என்ன செய்வது

கனனியைத் திறந்து .... இண்டர் நெட் எக்ஸ்ப்ளோரரில் www.blogger.com என்று தட்டச்சினான் சிவா.

_________________________________________________
இந்த கதை நண்பர் மங்களூர் சிவாவுக்கு அர்பணம்.

கும்முறவங்க கும்முங்க

வேம்பு !

பெரியநல்லூர் பெயருக்கு ஏற்றபடி இல்லாத ஒரு சின்ன கிராமம். ஆறு கிலோமிட்டர் அருகில் உள்ள பக்கத்து டவுனுக்கு போகவேண்டும் என்றால் வசதி உள்ளவர்கள் கட்டை வண்டியிலும், மற்றவர்கள் கால் நடையாகவும் தான் செல்ல வேண்டும் ரோடு அவ்வளவு மோசம். மற்றபடி நல்ல விளைச்சல் கொடுக்க கூடிய படி நீர் நிலைகள் நிறைந்த ஊர்.


அந்த ஊரில் அடுத்த கிராமம் கண்ணுக்கு தெரியும் கடை கோடியில், சுடுகாட்டை ஒட்டியபடி அந்த கிழவியின் குடில் இருந்தது. கிழவியின் பெயர் செல்லாத்தா. செல்லாத்தாவிற்கு எழுபத்தைந்து வயது இருக்கும். ஒன்டிக்கட்டை கிழவி. கிழவிக்கு அந்த ஓட்டை குடிலைத்தவிர துணையாக ஒரு வேப்பமரமும் இருந்தது.

கிழவி மழையோ, காற்றோ அதிகமாகவோ இருந்தால் கஞ்சி வைப்பதற்காக குடிசைக்குள் செல்வாள், மற்றபடி எப்பொழுதும் அந்த வேப்ப மரத்தடியில் தான், எந்நேரமும் எதாவது ஒப்பாறி வைத்தபடி கால் நீட்டி உட்கார்ந்திருப்பாள்.

வயது ஆனதால் செல்லாத்தாவை யாரும் வேலைக்கு கூப்பிடுவது இல்லை. கிழவிக்கு ஜீவனம் என்றால் அவள் பொறுக்கி சேகரிக்கும் முள் விறகு தான். அதனால் காலையிலோ, சாயந்தரத்திலோ வேப்ப மரத்தடியில் அவளைப் பார்க்க முடியாது. அப்படி வெளியில் போகும் காலில் முள்குத்தினால் சேகரிக்க ஒரு முள் குச்சியாவது கிடைத்ததே என்று சந்தோசமாக எடுத்து வைத்துக்கொள்வாள். அந்த விறகுகளை அந்த ஊரின் நடுவில் அமைந்திருக்கும் ராமாயி இட்டெலி கடையில் குடுத்துவிட்டு இரண்டு இட்டிலியில் அவள் காலை வயிற்றுப்பாடு, பின்பு பெட்டிகடை வெற்றிலை பாக்கு என அவளுடைய வாழ்க்கை ஓடும்.

அறுவடை காலங்களில் வயல் வெளிகளில் இரைந்து கிடக்கும் நெற்கதிர்களைப் பொறுக்கி கொஞ்சம் காசுக்கும் கஞ்சிக்கும் மாற்றிக் கொள்வாள். யாராவது தோட்டம் சுத்தம் செய்யச் சொன்னால் செய்வாள். முடிந்து வைத்திருக்கும் சில்லறையில், அரிசி நொய் வாங்கி சாயங்காலத்தில் நிறைய தண்ணீர்விட்டு காய்சிய கஞ்சிதான் மற்ற வேளைகளில் அவள் உணவு.

கிழவி புருசன் முப்பது வருசத்துக்கு முன்னமே செத்து போய்விட்டான், அவன் வைத்தது தான் அந்த வேப்பமரம், இருந்த ஒரு மகனும், ஜாதி கலவரத்தில பதினைந்து வருசத்துமுன்பு வெட்டி கொல்லப்பட்டான். அதை நினைத்துதான் கிழவி எப்பொழுதும் ஒப்பாறி வைத்துக் கொண்டிருப்பாள்.

மவராசன் போனவழி எம்மவனும் போனானே ?

மல்லுக்கட்ட போயிருந்தா சொல்லிப்புட்டு போவானே

'மசானம் போன மவன் எனக்கு மண்ணு போட வருவானா ?'

என்று ஒப்பாறி நீண்டு கொண்டிருக்கும்.

கிழவிக்கு வாய் கொஞ்சம் அதிகம், யாராவது வம்புக்கு இழுத்தால், அவர்கள் ஏன் இவளிடம் பேச்சு கொடுத்தோம் என்று நினைக்கும் அளவுக்கு பதில் பேசிவிடுவாள்.

'ஏ...ன் ஆத்தா, வேப்ப மரத்த பாத்து, என்னத்த யேசிச்சிக்கிட்டுருக்க, வேப்ப மரத்தில எலந்தபழம் வருமான்னா ? '

'வாடி எ...ஞ்ச் சக்காளத்தி, உன் புருசன் குடுக்குற புள்ளைய எந்த கெளையில கட்டி ஆட்டலாமுன்னு பாக்குரேன்... '

'ஐயையோ, நான் வர்ரேன் ' என்று ஓட்டமெடுத்தாள் கேட்டவள்

அப்புறம் ஒருநாள், ஒரு இளைஞன்

'கிழவி நீ வேனும்னா பாரு, ஒரு நா நீ துங்கிறப்ப, இந்த மரத்தை வெட்டி சாய்ச்சு தூக்கிட்டுத்தான் போப்போறேன் '

'போட போக்கத்தப் பயலே, காலுகையு நல்லாதான இருக்கு, கிழவி மடியில தான் கைய வெக்கனுமா, வெட்டிபுடுவேன் வெட்டி ' என்றாள்

அந்த மரத்தில் எல்லோருக்கும் ஒரு கண், வெட்டி வித்தா எப்படியும் ஒரு இரண்டாயிரத்துக்கு போகும், கிழவியிடம் கேட்டு பார்த்தார்கள்

கிழவி மசிந்து கொடுப்பதில்லை.

'எம் புருசனும் போயி, மவனும் போயி, ஒன்டி கட்டை எனக்கு இந்த மரம் ஒன்னுதான் தொணையா இருக்கு '

'கொடுக்க மாட்டேன்யா, கொடுக்கமாட்டேன், என் சாவு இந்த மரத்துக்கு கீழ தான் '

என்று மறுத்துவிடுவாள் கிழவி.

அன்று ஒருநாள் காலை பத்து மணி இருக்கும் லேசாக தூரிய தூற்றல் மரத்தின் அடியில் படுத்து கிடந்த அவளை எழுப்பி விட்டது, கிழவிக்கு உடம்பு சரியில்லை, கையில் காசும் இல்லை

ரொம்ப நேரம் எழுந்து நடக்க முடியாமல் மரத்தின் மீது சாய்ந்து கால் நீட்டி படுத்திருந்த கிழவி, வெற்றிலையை மென்றுவிட்டு, தண்ணீரை கொப்பளித்து குடித்து விட்டு

மெதுவாக எழுந்தாள்

'ராமியிகிட்ட இன்னெக்கு இட்டெலி கடன் கேக்க வேண்டியது தான் ' என்று நினைத்துக் கொண்டு மெதுவாக ஊர்ந்து நடந்து சென்றாள்.

இராமயிக்கும் வேறு வழியில்லை, கிழவிக்கு எடுத்துவச்ச இட்டெலி, இனிமேலும் யாரும் வாங்க வரமாட்டங்க, பரவாயில்லை என்று முனுகிகொண்டு கிழவிக்கு கடனுக்கு இட்டெலியை குடுத்தாள்.

இட்டெலியை தின்ற கிழவிக்கு தெம்பு வர, திரும்பி தன் குடிசையை நோக்கி நடந்தாள்

கிழவிக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது

எல்லோரும் அதே திசையில் பதட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

'என்னாங்கடி இப்படி ஓடுறிங்க, டவுன்லேர்ந்து கொழா போட்டவன் யாராவது வந்திருக்கானா ? '

கிழவிக்கு நின்று பதில் சொல்லக் கூட யாரும் தயாரக இல்லை. அப்படி ஒரு ஓட்டம் ஓடினார்கள்

கிழவி தன் குடிசை இருக்கும் இடத்தில் சற்று தொலைவை அடைந்ததும், கவனித்துவிட்டாள்

ஆம் அவள் குடிசை அருகில் தான் ஒரே கூட்டம்

'என் வீட்டு வாசல்ல ஏன் இவ்வளவு பேரு நிக்கிறானுங்க, என்னான்னு தெரியலயே, கிட்ட போயி பாப்போம் ' என்று நினைத்துக் கொண்டு முன்னேறினாள்

குடிசையை நெருங்க, நெருங்க அவளை முந்திக் கொண்டு ஆண்களும் பெண்களும் அங்கு ஓடிவந்து நின்று கொண்டிருந்தார்கள்

அருகில் செல்ல செல்ல 'ஆத்தாடி, மகமாயி ' என்று குழவை சத்தம் காதை கிழித்துக் கொண்டு கிழவிக்கு கேட்டது

கூட்டத்தை விளக்கி உள்ளே நுளைய முனைந்தாள் கிழவி. முடியவில்லை, இடுக்கு வழியாக பார்த்தாள், வேப்ப மரத்தை சுற்றி பத்தடி விட்டு எல்லோரும் வட்டமாக நின்று கொண்டிருந்தார்கள்

ஒரு பெரிசு கையில் ஒரு நீண்ட கழியை வைத்துக் கொண்டு,

'தீட்டு பட்டுடும் யாரும் நெருங்காதிர்கள், அங்கேர்ந்தே பாருங்க ' என்று பயமுறுத்திக் கொண்டிருந்தார்

வேப்ப மரத்தடியில் சிவப்பாக இரத்தம் போல வழிந்திருந்தது

அதற்குள் யாரோ ஒருவர்,

'இது தெய்வ குத்தமா தான் இருக்கனும், நாம மூனு வருசமா, பொங்க வெக்கல... அதான் ஆத்தா கோபத்த காட்டுறா '

இன்னொரு பெண் சம்பவத்தை விவரித்தாள்

'சாணியள்ள வந்த மொட்ட பட்டம்மாதான் மொதல்ல பாத்திருக்கா '

'பாத்துட்டு, ஒளரிக்கிட்டே ஊருக்குள்ள ஓடிவந்தவதான் எல்லாத்தையும் சொன்னா '

'செல்லாத்தாவோட வேப்பமரத்தடியில ரத்தம் கொட்டுதுன்னு ' என்று வேர்க்க வேர்க்க அதிர்சியாக சொன்னவள்,

'இங்க வந்து பாத்தா அது நெசம்தான் ' என்றாள். எல்லோரும் வாயை பிளந்தார்கள்

அதற்குள் நிறைய பெண்கள் 'ஆத்தா, மாரியம்மா... ' சாமியாடி சரிந்தார்கள்

கிழவி மெல்ல கண்களை இடுக்கி வேப்ப மரத்தடியில் பார்த்தாள்

அவளுக்கு புரிந்தது, ஏதோ சொல்ல வாயெடுக்கு முன்

'டேய்... போயி ஒரு உண்டியல கொண்டாங்கடா, கெடாய வெட்டுங்கடா, கோழிய அறுங்கடா ' என ஒருவர் கத்த

கிழவி வாயை மூடிக்கொண்டு, மவுனமாக பார்த்துக்கொண்டிருந்தாள்

அதற்குள் எல்லாம் வந்து சேர்ந்தது,

கிழவி எல்லோரையும் விலக்கிவிட்டு மரத்திற்கு முன் நின்று கொண்டு கூட்டத்தை பார்த்து, ஆட ஆரம்பித்தாள்

'டேய் ஆத்தா என் கனவுல வந்து சொன்னாடா, இந்த ஊருல யாரும் எனக்கு பொங்க வெக்கல அதனால ஊரவிட்டே போறேன்னு சொன்னாடா... '

'இவ என் வீட தேடி வந்திருக்க, செய்யறத செஞ்சிட்டு போங்கடா, வெள்ளி, செவ்வா வெளக்கேத்துங்கடா, இல்லேன்னா ஊரவிட்டு போய்டுவா '

'ரொம்ப கோவமா இருக்கா, இவ இன்னுமே இங்க தான் இருக்கனும், உட்டுடாதிங்கடா '

'சரி செல்லாத்தா கெழவி அப்படியே செஞ்சிடுறோம், ஆத்தா கோவம் கொறஞ்சு, நல்ல வெளச்சல கொடுக்கனும் ' என்றார்கள் கோரசாக

கிழவிக்கு மட்டும் தெரியும்,

வழக்கமாக வெற்றிலை போட்டு சற்று தள்ளி துப்புபவள், இன்று உடம்பு முடியாததால், மரத்தடியிலேயே துப்பியதும், மழை காரணமாக அது வழிந்து ரத்தம் போல் எல்லோருக்கும் தெரிந்தது.

மனதுக்குள்,

'இனிமே, வயித்துக்காக வெயில்ல வெறகு பொறுக்க வேண்டியதில்லை, வேப்ப மரத்துக்கும் நான் சாகிறவறைக்கும் ஆபத்து வராது ' நினைத்து சந்தோசப்பட்டுக் கொண்டாள்

முதன் முறையாக அந்த மரம் அவளுக்கு, ஆத்தா மகமாயி போலவே தெரிந்தது, எல்லோரையும் போல அவளும் கையெடுத்து மரத்தை நோக்கி அர்த்தத்துடன் கும்பிட்டாள்.


மரமும் தண்ணீர் விட்டு வளர்த்து இது நாள் வரையில் தன்னை காத்ததற்கு நன்றி சொல்லுவது போல் சந்தோசமாக அவளைப்பார்த்து தலையை அசைத்து கொண்டிருந்தது.

திண்ணைFriday March 31, 2006

Monday, December 10, 2007

காதாலா....?..இது காதாலா...?...- யார் அந்த மீனா...?

பாகம் ஒன்னு, இரண்டு

பாலு கதவைத் திறந்தால், அங்கே பளிச்சென்று சீருடையிலே ரவி...

குழுப்ப்பமான பாலு.."என்னடா..இந்நேரத்திலே...நீ இந்நேரத்திலே...முழிச்சிக்கிட்டுக் கூட இருக்க மாட்ட...இவ்வளவு சீக்கிரம் கிளம்பி வந்துட்டே...அதுவும் என் வீட்டுக்கே.." என்றான்.

ரவி, வரும்போதே யோசித்து வைத்திருந்த கதையயைச் சொல்ல ஆரம்பித்தான். " அது ஒன்னுமில்லைடா...எங்க அம்மா வேலைக்குப் போறாங்களா..அதுனாலே..என்னைய சீக்கிரமா எழுப்பிவிடுறாங்க...அவ்வளவு தான்..வேற ஒன்னும் இல்லை..."..

" அப்பறம்...எவ்வளவு நாள் தான் பஸ்சிலே போறது...போர் அடிக்குது...வாடா இன்னைக்கு என் கூட சைக்கிளிலே போலாம்.."

பாலுவிற்கு ஏதோ லேசாக புரிந்தது...

சரிப் போக போக பார்த்துக்கலாம்..என்று முடிவு செய்துக் கொண்டு.."..சரி..உக்காருடா...நானும் கிளம்புறேன்" என்று சொன்னான் பாலு.

சொல்லிவிட்டு ஏன்டா சொன்னோம் என்று ஆனது பாலுவிற்கு...

ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பாலு கிளம்பிவிட்டானா என்று ரவி வீட்டைச் சுற்றி வந்தான்.

பாலுவின் அம்மா வேறு சும்மாயிராமல்.." பாருடா..இது புள்ள..நீயும் தான் இருக்கிறீயே...சீக்கிரம் எழுந்திரின்னா...எட்டிக் காயா கசக்குது உனக்கு.." என்று ரவிக்கு மகுடம் சூட்டினாள். பொதுவாகவே ரவிக்கு அவர்களிடம் நல்ல பெயர்..இன்று இன்னும் அது திடமானது. பாலு மனதுக்குள் சபித்துக் கொண்டே.....குளித்து முடித்து கிளம்பினான்.

அவர்கள் இருவரும் சைக்கிளில் சேர்ந்து கிளம்பினார்கள். ரவியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், பாலு தினறினான்.

பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தான் பாலு.."டேய் நில்லுடா...என்ன அவசரம் உனக்கு..மணி இப்ப தான் 7.30 ஆவுது..நாம் மெதுவா போனாலும், 8.15க்கு போயிடலாம்...ஸ்கூல் ஆரம்பிக்கிறது 9.00 மணிக்குத் தானே.." என்று சொன்னான்.

ரவி..இதை எதிர்ப்பார்த்திருந்தான்..ஆனால்,பதில் தயாராக வைத்திருக்கவில்லை...சிறிது நேரம் யோசித்தான்..பின்னர்.."இல்லடா..வேகமா போனா எவ்வளவு நேரத்திலே போக முடியுமின்னு பாக்கலாமின்னு தான்..அதுவுமில்லாம, நேரம் ஆகிட்டா...டிராஃபிக் அதிகமாகிடும்டா..." என்று சமாளிவிக்கேசன் செய்தான்.

பாலுவுக்கு தெளிவாக ஒன்று தெரிந்தது...இனிமேல்...பழைய வழக்கங்கள் உடைப்படும்...புது வழக்கங்கள் வரும் ...சரி...போகின்ற வரைக்கும் போகட்டும் என்று நினைத்துக் கொண்டு, தன் சைக்கிளை வேகமாக மிதித்தான்.



7.55க்கு வகுப்புக்குள் நுழைந்தனர். வகுப்பு காலியாக இருந்தது. பெண்கள் வரிசையிலே, ஒரே ஒரு பை இருந்தது. அது யாருடையது என்று பாலுவுக்குத் தெரியும்...ஆனாலும், அவன் ரவியிடம் கேட்டான்..." என்னடா..ஒருத்தனையும் கானோம்...யார்டாது பொண்ணுங்கள்ல..சீக்கிரம் வந்திருகிறது.."


ரவிக்குத் தெரியும்...பாலு எதுக்கு கேட்கிறான் என்று..இருந்தாலும், அறியா சிறுவன் போல் , முகத்தை வைத்துக் கொண்டு...தெரியலையேடா..கொஞ்ச சீக்கிரம் வந்திருந்தா யாருன்னு பார்த்திருக்கலாம்...என்று சொல்லிக் கொண்டே தன்னை அடிக்க வரும் பாலுவை எதிர்ப்பார்த்து ஓடத் துவங்கினான்.

பாலுவும், அவன் எதிர்ப்பார்த்தது போல ரவியயைத் துரத்திக் கொண்டு ஓடத் துவங்கினான். ஆட்டம் ஆரம்பித்தது. பெஞ்சுகளில் மேல் தாவி ஏறிய ரவி..வகுப்பின் ஒரு மூலைக்கு ஓடினான். பாலு பின்னாலே விரட்டிச் சென்றான். பாலு வலியவன் கிடையாது..ரவியின் அடி தாங்க மாட்டான்..ஆனால், நன்பர்களுக்குள் விரட்டி விளையாடுவதிலே அலாதி இன்பம்..அதுவும்..ரவி இருக்கிற நிலையிலே, தன் மகிழ்ச்சியயைக் காட்ட தானே போய நன்பனின் வலையிலே விழுந்து இப்படி விரட்டப்படுவது பிடித்திருந்து.

பாலு விரட்டிவர ரவி..வகுப்பின் நுழைவு வாயிலுக்கு அருகிலே ஓடினான். அவன் வாயிலை அடையவு, அங்கே அவள் தோன்றவும் சரியாக இருந்தது. தவிர்க்கமுடியாமல், ரவி அவள் மீது மோதினான். பாலு ஒரு நிமிடம் திகைத்தான், பின்னர் நகைத்தான்.

அவள் அதை எதிர்ப்பார்க்கவில்லை...நிலை குலைந்தாள்..ரவியும் அதை எதிர்ப்பார்க்கவில்லை..அவளை தள்ளிவிட்டாவாறே, ஏய் என்ற பெரிய சத்தம் போட்டவாறே விழுந்தான்.

நல்ல வேளையாக கையிலே சிராய்ப்புக்கள் தவிர அடி ஏதும் படவில்லை..அவனுக்கு..திடிரென்று நினைவு வந்தவனாக, அவளிடம் அவன் கேட்டான்.." அடி ஏதும் படவில்லையே உனக்கு" என்று..அதற்கு பதிலாக குயில் கூவிற்று...பாலுவுக்கு..அவள் சொன்னது கேட்டது.." இல்லை..காது தான் வலிக்குது நீ கத்தினதில்" என்று சொல்லிவிட்டு சிரித்தவாறு தன் இடத்துக்குச் சென்றாள்.

பாலு, ரவியயை தள்ளிக் கொண்டு, வெளியே நடந்தான். ரவி...மெதுவாக, "டேய் வேற யார்க்கிட்டேயும், நான் அவ மேல மோதினதை சொல்லிடாதே" என்றான்.

பாலு, இப்போது அப்பாவி வேசம் கட்டினான்..." ஏன்டா..நம்ம இட்லி, ஆந்தைக்கிட்டேயும்மா"..

ரவி...குரலிலே சற்று கடுமையயை ஏற்றி..." ஆமான்டா..சும்மாவே எல்லாரும் ரவுண்டு கட்டுவீங்க..இது வேற தெரிஞ்சா என் நிம்மதி போயிறும்" என்றான்

பாலுவிற்கு தெரியும்..அவன் அப்படி ஓட்டப்படுவதை விரும்பிகிறான் என்று..இருந்தாலும், நல்ல நன்பனாக, சரிடா நான் யாருக்கிட்டேயும் சொல்ல மாட்டேன். என்று உறுதி சொன்னான். அவன் மட்டுமே ஓட்ட ஒரு விசயம் மாட்டியதில் அவனுக்கு மகிழ்ச்சியே..

ரவியிடம் நீங்கள் அந்தப் பெண்ணைப் பற்றிக் கேட்டால், இப்படித் தான் சொல்லுவான். அவள் அழகானவள்....(அதெப்படி..அழகான பொண்ணு தான் காதலிக்கிறா..இல்லை காதலிக்கப்படுறா..இவன் பொய் சொல்லுறான். இவனும் இவன் நன்பர்களும் முதலிலே வச்ச பேர் சைனீஸ் பட்லர், புல்டோசர்)..நல்ல பேரு...லக்ஷ்மி காயத்ரி. வீடு...அது இப்போதைக்கு தெரியலை..ஆனா, கூடிய விரைவில் தெரிஞ்சிக்குவேன். அவள் கூட இருக்கும் பெண்கள் அனைவருமே சுமாரனவர்கள்..அப்படி ரவி சொல்லும் போது லால் அருகில் இருந்தால்...அவனின் பதில் இப்படி இருக்கும்....?

" இல்லை மீனாக்கூட அழகானவள்".

யார் அந்த மீனா...? ரவிக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்...?





-வளரும்..

நிர்வாணப் படம்....!

இன்னிக்கு சுஜியை எப்படியாவது வீட்டுக் கூட்டிவந்து அதை போட்டு காட்டிவிட வேண்டியதுதான்.

நினைத்துக் கொண்டு அவளுக்காக பைக்கில் காத்திருக்கும் போதே இவனை நோக்கி வந்தாள்,

"டேய் சுரேஷ்... தலை வலிக்குதுடா"

இதான் சாக்கு என்று நினைத்து,

"உனக்கு காப்பி தானே வேண்டும், நேரா எங்க வீட்டுக் போறோம்"

"ஐயையோ, உங்க வீட்டுக்கா ?"

"என்னமோ, பார்க்காதது போல சொல்றே, நாம காலேஜ் முடிச்சதுலேர்ந்து சேர்ந்து ஊர் சுற்றுவதுதான் நம்ம இரண்டு பேர் வீட்டுக்கும் தெரியுமே, நீ என்னை பார்க்க வர்ற சாக்குல வருங்கால அத்தைக்கு ஐஸ் வைக்க வர்றவ தானே"

"அடப்போடா... ஒரு காப்பிக்காக அவ்வளவு தூரமா ?"

"ஏய் ஏய் ...நான் காப்பி சூப்பராக போடுவேன்... ஐயா வோட காப்பியை நீ குடிச்சு பாரு அப்ப தெரியும்"

"எப்படியும் கல்யாணத்துக்கு அப்பறம், நீ தானே போடப்போறே அப்பறம் குடிக்கலாம்னு இருந்தேன்"

சொல்லிவிட்டு சிரித்தாள்

"அதைவிடு...நான் வீட்டுக்கு கூப்பிடுறத்துக்கு காரணமே...இன்னிக்கு வீட்டில் யாரும் இல்லை...அம்மா, தங்கை அப்பா எல்லாம் ஈவ்னிங் ஷோ சினிமா போயிருக்காங்க"

"அதுனால...."

"அது...இல்ல...அது வந்து ...வெளியில போய் ஹோட்டலில் பர்ஸை கரைப்பதைவிட வீட்டுக்கு போனா ஜாலியாக.."

"ஜாலியாக ...?"

"டிவிடில வீட்டியோ சாங்க் போட்டு கேட்கலாம்..."

"அதானே...வேற ஒன்னும் இல்லையே..."

"வேற எதும் வேணுமா ..." குறும்பாக பார்த்தான்

"நறுக்கிடுவேன்.....எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் தான்" ( அதே டயலாக் - மங்களூர் சிவா நோ டென்சன் )

அவன் வீட்டுக்கு சென்றார்கள்,

அவளை ஹாலில் உட்காரவைத்து விட்டு காப்பி போட்டுக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அருகில் உட்கார்ந்தான்,

சுஜி, இப்ப ஒரு டிவிடி போடப் போகிறேன்...நிர்வாணப்படம்

அதிர்ச்சி அடைந்து கோவமாக அவனைப் முறைத்துப் பார்ப்பதை சிறிதும் சட்டை செய்யாமல்

அவன் ரிமூட்டை அமுக்க... இருகைகளையும் குவித்து கண்களை மூடிக் கொண்டாள்,

"எதிர்பார்க்கல சுரேஷ்..."

"ப்ளிஸ்...தப்பா நினைச்சிக்கிட்டு இருக்கிறே...இங்கே பார்.." மெல்லியதாக சிரித்துவிட்டு அவன் அவளை மெதுவாக நெருங்கி விரல்களை விலக்க, விரல் இடுக்கு வழியாக லேசாக கூச்சத்துடன் வேண்டா வெறுப்பாக டிவியை பார்த்தாள்

அவனுடைய நிர்வாணப்படங்கள் ஒவ்வொரு சிலைடாக வந்து கொண்டிருந்தது,

அவன் கைகளை விலக்கிவிட்டு, கண்களை விரித்து பார்க்க...

டிவி திரையில் ஒட்டுத்துணிக் கூட இல்லாமல் குப்புறப் படுத்துக் கிடந்தான், நான்கு மாதக் குழந்தையாக இருந்த போது குப்புத்துக் கொண்ட போது எடுத்த படமாம், அப்பறம் மூன்று வயது வரை பல படங்களில் ... அம்மணமாகவும், ஆடைகளுடனும் அழகாக சிரித்துக் கொண்டிருந்தான்

--------- இதோட கதை முடிந்தது --------- மேலும் படிக்க விரும்புகிறவர்களுக்கு

"யூ நாட்டி... யூ வெர்ரி க்யூட்" அவள் அவனை செல்லமாக கிள்ளினால்

"வெட்கப்படுவேன்னு நினைத்தேன்..."

"நீ அம்மணமாக இருப்பதற்கு நான் ஏண்டா வெட்கப்படனும் ?"

அசடுவழிந்தான்...

"போன வாரம் தான் தாத்தா வீட்டில் இருந்த என் பழைய புகைப்படங்களையெல்லாம் டிவிடி ஆல்பமாக மாற்றினோம்" அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே

திறந்திருந்த

கதவின் வழியாக நிழல் ஆட

"வாம்மா சுஜி"

"தியேட்டர்கிட்ட போனதும் இவ தலைவலிக்குதுன்னு சொன்னாள் எல்லோரும் திரும்பிட்டோம்... வர்ற வழியில் உன் அப்பா நண்பரை பார்த்துட்டு நின்னுட்டார்.

"அண்ணா... தலை இன்னும் வலிக்குது....எனக்கு ஒரு காப்பி போடேன் நீ தான் சூப்பராக போடுவியே..."

அதைக் கேட்டு மனதுக்குள் வந்த சிரிப்பை அடக்கி ... சுஜி அவனை குறும்பாக பார்த்தாள்.

சட்டென்று தடைபட்டு போன தனிமை (ப்ரைவசி) அவர்கள் இருவருக்கும் கொஞ்சம் வெறுமையாகத்தான் இருந்தது, ஆனாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

கதை சொல்ல வாரோம்....புதுப் பதிவு...

சோதனை....உங்களை அல்ல...பதிவு வருதா என்று பார்க்க

Wednesday, December 5, 2007

காதாலா....?..இது காதாலா...?...- மாட்டிக்கினான்...ம்ம்ம்மாட்டிக்கினான்

முதல் பாகம் : காதாலா....?..இது காதாலா...?...- பத்தும் & ஏழூம்

இட்லி ரவி, இடதுபுறமும், ரவி அவனுக்கு அருகிலேயும், கன்னாடி பாலு, அடுத்ததாகவும், அவனுக்கு அடுத்து ஆந்தை ராஜுவும் அமர்ந்திருந்தனர். இவர்களில், ரவி சற்றே, பெரிய ஆளாக நடக்க முயற்சிப்பதால், அவர்களும் அதை ஏற்று, ரவியின் அணியில் இருந்து வந்தனர்.

என்ன நடந்தது என்று தெரியாமல், மண்டையயை பிறாண்டிக்கொண்டிருந்தான், கன்னாடி பாலு. ஆர்வம் தாளாமல், சற்றே பின் நகர்ந்து, கையயை பின்னால், விட்டு, இட்லி ரவியின் மண்டையிலே ஒரு தட்டு தட்டினான். இட்லி ரவி, கோவமாக பின்னால் திரும்பி, எவன்டா அது என்ற ஒரு பார்வையயை வீசத் தயாரானப் போது, பாலு பின்னால் தள்ளி அமர்ந்திருப்பைதைப் பார்த்து, என்னடா என்றான் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே...

அவனுக்குத் தெரியாதா அவன் எதுக்காக கூப்பிட்டான் என்று...

னொன்னாடா...சொல்லுடா, என்ன விசயமின்னு...

கொஞ்ச நேரம் அவன் பிகு பன்னுவதும், இவன் கிள்ளுவதுமாக நேரம் கடந்தது. சுவாரசியமாக தூங்க முயற்சித்துக் கொண்டிருந்த, ஆந்தைக்கு எதோ நடக்குது என்று புரிந்து, அவனும் ஆட்டையிலே கலந்துப் பின்பு, இ.ரவியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
சொல்லுறேன்டா என்று சொல்லிவிட்டு...மிஸுப் போனதும் சொல்லுறேன் என்று கொஞ்ச நேரம் அவர்களின் தவிப்பை ரசித்தான்.

ஆசிரியர், வகுப்பை விட்டு நகர்ந்ததும், ரவி,ஓரத்துக்கு தள்ளப்பட்டு, இ.ரவி, உள்ளே இழுக்கப்பட்டான். அவன் மெதுவாக " டேய்..அது வேற ஒன்னுமில்லடா, நம்ம கிளாஸ் பொன்னுங்க, நோட்ல, FளாMஏஸ் போட்டு விளாயாடியிருக்காங்க..அதுல நம்ம ரவி பேரையும், புதுசா வந்திருக்கே அந்தப் பொண்ணு பேரையும் போட்டு பாத்திருக்காங்க...அதை நம்ம சூரியா பாத்துட்டான்...வேகமா அந்தப் பக்கத்தை கிழிச்சி எடுத்துட்டான்...அதை அந்த ரவுடி மேரி மறுபடியும் பிடுங்கிட்டாளாம்.."

பாலு..இவன் ரொம்ப விவரமானவன்..."டேய் யார் எழுதினாடா, ரவி பேரை...அந்தப் பொண்ணா, ரவுடி மேரியா, உன் பேரும் ரவி தானே..அதெப்படி இவன் தான்னு சொல்லுறே"

ரவியும் ஆர்வமாக, அது தானே...நான் இதை கவனிக்கவே இல்லையே...என்று மனசுக்குள்ளே நினைத்துக் கொண்டு..அமைதியாக காதுகளை கூர்மையாக்கிக் கொண்டான்..

இ.ரவி..." டேய்...அதுல இவன் இன்ஷியல் இருந்ததாம்டா...கையெழுத்து மேரியோடது தான்டா"..




ஆந்தை அதற்கு.." டேய்..யார் எழுதினா என்ன..எழுதும் போது அந்தப் பொண்ணு, ஒன்னும் சொல்லையின்னா என்ன அரத்தம்" என்று சொல்லிவிட்டு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தான்

ரவி..உடனே...சும்மாயிருங்கடா...நீங்க வேற ஏதையாச்சும் பேசிக்கிட்டு இருக்காதீங்க என்று சொல்லிவிட்டு. ஆந்தையை பார்ப்பது போல்...பின்னால் கண்களை திருப்பி, முதல் முறை பார்பவன் போல், அங்கிருந்த புதுப் பொண்ணைப் பார்த்தான்.

தாள் கைப்பற்றப்பட்டதால், விவரம் மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்று அமைதியாகி விட்ட, பெண்கள் அணி, சுவாரசியமாக, இடைவேளையில் வாங்கிய மிட்டாய், நெல்லிக்கனியயை பிரித்து மேய்ந்துக் கொண்டிருந்தனர்.

அவள் பார்க்காதிருக்க வேண்டுமே என்று ரவி நினைத்ததாலோ என்னமோ...ரவி பார்ப்பதை அவள் பார்க்கவில்லை...திடிரென்று அவள் ரொம்ப அழகானது போல் அவனுக்கு ஒரு உணர்வு. இத்தனை நாள் இவள் எனக்கு போட்டி என்று அல்லாவா நினைத்து வந்தேன். இவளுக்கு என் மேல் ஒரு ஈர்ப்பா...என்று எண்ணியபடி அவர்கள் முதலிலே சண்டையிட்ட நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தான். அதற்குள் வாத்தியார் வந்து விட, அவசரமாக முன் திரும்பி பாடத்தை கவணிக்க முற்பட்டான்.

சில மணி நேரங்களிலே, அதை அவன் மறந்து, வழக்கமான அவர்களுக்குள் விளையாடும், விளையாட்டுக்களான், கால் மிதி, கிள்ளுவது போன்ற விளையாட்டை விளாயடிக்கொண்டு, 4.20 மணிக்கு வீட்டிற்கு கிளம்பினான்.

அடுத்த நாள், பள்ளி, பேருந்திலே வரும் போது, மெதுவாக பாலூ, ஆரம்பித்தான்.."என்னாடா சரியா தூங்கலையா..கண் எல்லாம் சிவந்துப் போயிருக்கு.."..

இ.ரவி, மற்றும் ஆந்தையின் வீடு, பள்ளிக்கு அருகிலேயிருப்பதால், அவர்கள் பேருந்திலே வர மாட்டார்கள். அதனாலே, பாலு கூட்டனி இல்லாத காரணத்தினாலெ...ஓட்டுவதை நிறுத்திவிட்டு, பேருந்திலே, கதவை திறந்து மூடும் சீரிய பணியயை செய்ய ரவிக்கு தன்னால் ஆன, உதவியயை செய்ய ஆரம்பித்தான். பள்ளிச் சிறுவர்கள் பேருந்திலே, கதவு திறந்து மூடுவது என்பது, பெரிய வேலை. அதை செய்ய போட்ட போட்டி, காட்ட குஸ்தியெல்லாம் நடக்கும். ரவி 6ம் வகுப்பு வந்திலேயிருந்து, அவன் தான் அதை செய்து வருகிறான்.

பாலு, ரவி கதவை திறக்கும் போது, மிதி வண்டியோ, இல்லை இரு சக்கர வாகனமோ வருகிறதா என்று பார்த்து, சமிக்ஞை கொடுப்பான். ஒவ்வொரு நிறுத்ததிலேயும் அவர்கள் இருவருமே, இறங்கி, ஏறுவார்கள். பேருந்திலே, இதுகென்று இருப்பவர், முன்னிறுக்கையிலே, அமர்ந்து, ஓட்டுனரடுன் சுவாரசியமாக பேசிக் கொண்டு வருவார். பேருந்துல் ரவி ஒரு நாள் வரவில்லை என்றாலும், அவருக்கு வேலை வந்து விடும். ஒரு அலுப்போ , சலிப்போ இல்லாமல் ரவியும், பாலுவும், பார்ப்பதிலே அவர்க்கு வேலை சுலபமாகிவிட்டது.

பள்ளிக்கு அவன் வரும் போது, தான் கவனித்தான், அவர்கள் வரும் போது, வகுப்பிலே அந்தப் பெண்ணை தவிர வேறு யாருமே இல்லை. அவள் எப்படி வகுப்பிற்கு வருகிறாள் என்று நினைத்துப் பார்த்தன. சைக்கிள் ரிக்ஷாவிலேப் பார்த்தது போல் ஞாபகம்..பாலுவிடம்...கேட்டான்..டேய்..இவ எப்படிடா வரா...வீடு எங்கே என்று...

அந்நேரம்ப் பார்த்தா, ஆந்தையும், இ.ரவியும் வர வேண்டும்...

ஆரம்பம் ஆனது, ஒரு சகாப்தம்...ரவி முதலில் அவர்களை கடிந்துக் கொண்டன்..விடையயை தெரிந்துக் கொள்வதிலே, தான் அவனுக்கு ஆர்வம். ஆந்தை தேவையான தகவலைச் சொன்னான். அவள் தினமும், 7.45 மணிக்கே தன் வீட்டைக் கடந்து, பள்ளிக்குச் செல்வாள் என்ற அறிய தகவலையும் சொன்னான்.

ரவி, இயல்பாகவே, சுமாராக படிப்பவன். ஆனால், எல்லா பாடத்திலேயும் தேர்வு ஆகிவிடுவான். அவன் நன்பர்களிடம் , அவனுகு நல்ல பெயர் இருப்பதற்கான காரணத்திலே இதுவும் ஒன்று. ஆனால், இப்போது எல்லாம், அவனுக்கு பாடத்திலே, மனம் லயிப்பதில்லை. ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு பெருமிதம்..தன்னை ஒரு பெண் விரும்புகிறாள் என்ற நினைப்பிலே மிதக்க ஆரம்பித்தான்..

போதக்குறைக்கு, நன்பர்கள் ஒன்றுச் சேர்ந்தாலே, அவன் தலையயை உருட்ட ஆரம்பித்தார்கள். மெதுவாக அது வகுப்புக்குள்ளே பரவி..எல்லா மாணவர்களுக்கும் அது தெரிந்தது.

அன்று இ.ரவி வரவில்லை...உடம்புக்கு சுகமில்லை என்ற தகவல் அவன் தங்கை மூலமாக வந்து சேர்ந்தது. சரி.இன்று வசதியாக உட்காரலாம் என்று எண்ணும் போது, லால் காந்த் அவன் அருகில் வந்தமர்ந்தன். அவன் கூட ரவியின் வீட்டருகே இருப்பவன் தான். பலமான, நட்பு இல்லை என்றாலும், இது வரை சன்டையிட்டதில்லை.

வந்தமர்ந்தவுடனே...என்ன ஹீரோ என்றான்...ரவி நிமிர்ந்து உட்கார்ந்தான்.....உடனே தன் நட்பு வட்டத்தில், ஒரு பத்தடி அருகே அவனை விட்டான். லால் மெதவாக மத்தியானம் பேச்சை ஆரம்பித்தான். உன்னை அவள் லவ் பண்ணுறாளாமே..

ரவிக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை....அப்படியெல்லாம்..இல்லை...என்று மறுத்தான்..

லால்..அதற்கு.."டேய் எல்லாம் எனக்குத் தெரியும்..அந்த தாளிலேயிருந்த விவரம்..எல்லா தெரியும்...லவ் இல்லமலா அதை எழுதியிருப்பா.."

ரவி...அவனின் விளக்கத்தை மண்டையிலே ஏற்றிக் கொண்டான்.

அப்படியே பேச்சை மாற்றி, பொழுதைக் கழித்தான். இப்போதெல்லாம்..இடைவேளையில் சீக்கிரம் வகுப்பிற்குத் திரும்பவே நினைக்கிறான். நன்பர்களும் , பொழுது போக்க இவன் ஒருவன் மாட்டினான் என்று, நின்றால் மரம், நிமிர்ந்தல் கோபுரம் என்று புகழ் பாடி, ஓட்டி ஜாலியாக பொழுதைக் கழிக்கத் தொடங்கினார்கள்.

நாட்கள் ஓடின, இரண்டு வாரம் கழிந்தது..

கன்னாடி பாலு அப்போது தான் தூங்கிக் கொண்டியிருந்தான்..யாரோ, கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, முழித்தான்...

"டேய் பாலு...யாருன்னு பாருடா" என்று பாலுவின் அம்மா சமையலறையில் இருந்தபடி முழங்கினாள்..

அதிகாலை 7.00 மனிக்கே எவன்டா அது...என்று முனங்கியபடி...டேய் பேப்பர் காரா..அடுத்த வாரம் வாடா இன்னைகு அப்பா இல்ல...என்றபடி கதவைத் திறந்தான்...அதிர்ந்தான்...

பாலு ஏன்..அதிர்ந்தான்...?

-வளரும்

காதாலா....?..இது காதாலா...?...- பத்தும் & ஏழூம்

இது இங்கேயிருந்து நகல் செய்யப்பட்டது

10ஆம் வகுப்பிலே புகுந்து, புது வகுப்புத் தலைவனாகவும் ஆன, மகிழ்ச்சியயைக்கூட கொண்டாட முடியாத, ஒரு மனோநிலையிலே அவன் இருந்தான். எட்டாம் வகுப்பு முதல், அவனுக்கென்றே முடிவு செய்யப்பட்ட ( வேற யாரு குடி கெடுக்க வகுப்புக்குத் தான் நிறைய பேர் வரானுங்களே) செய்த பொண்ணை, இன்று வேறு வகுப்பில் இருந்து ஒருவன் வந்து டாவடிக்கின்றான். கண் முன்னே நடைப்பெற்றாலும், அவனால், ஒன்றும் செய்ய முடியவில்லை.


ஏன், அவன் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதை நான் அறிய, கொஞ்சம் முன் கதை அவசியம். அவன் அப்போது, 7 வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனை நாம் எப்படிச் சொல்லுவது, ரவி என்று நாம் கூப்பிடுவோம். வகுப்பிலே, ஒரு குட்டித் தலைவனாக முயன்றுக்கொண்டிருந்தான் ரவி அப்போது. அவன்
வேலை, வகுப்பிலே, கெட்ட வார்த்தைகளை பேசுதல், சைட் அடிப்பதில் கூட்டனி அமைத்தல் என்று செவ்வனே செய்து வந்தான். ஆனால், எப்போதும் போல முன்வரிசையில் அமர்ந்து, நல்ல பிள்ளையாக பாடம் கேட்டுக்கொண்டிருந்தான்.

திடிரென்று வகுப்பு நடக்கும் போது, பின்னால் வரிசையிலே ஒரு குழப்பம். பெண்கள் வரிசையில், அமர்ந்திருந்த மேரிக்கும், சுரியாவுக்கும் ஏதோ தகராறு. சூரியா கையிலே இருந்து, ஒரு தாளை மேரி பலவந்தமாக எடுத்துவிட்டாள். சூரியாவை எல்லோரும், கேள்விக்கனைகளோடு துளைக்க ஆரம்பித்தனர். இடைவேளைக்கு மணி அடித்தவுடன், ஆசிரியயை, இந்த பிரச்சனையயை மறந்து, வணக்கத்தைப் பெற்றுக் கொண்டு நடைப்போட்டார்.


ரவி , இதை மறந்துவிட்டு, வழக்கமாக செல்லும், பெட்டிக்கடைக்கு தன் சகபரிவாரங்களுடன் நடைப் போட்டான்.
தான் வைத்திருந்த காசிலே, சில தின்பண்டங்களை வாங்கி, பின் நன்பர்களுக்குள் பகிர்ந்தளித்துவிட்டு, மாதமுமும்மாரி பொழிகிறதா என்று பள்ளியயைச் சுற்றி வந்து விட்டு, அடுத்த வகுப்பு ஆரம்பிக்க 5 நிமிடங்களுக்கும் முன் வந்தான்.

அவனுடைய சக மாணாக்கர்கள் அவனை பார்த்து, புன் முறுவல பூத்தனர். அவனும், சிறு நகை ஒன்றை தந்துவிட்டு நகல முயல, பின் வரிசையில் உள்ள அனைவருமே விசமத்தனமாக சிரிப்பதைக் கண்டு, அவனுக்கு மன்டையிலே விளக்கெரிந்தது.


என்னடா...என்ன விசயம் என்று கேட்டான்.

அவர்கள் எல்லோரும், பெண்கள் வரிசையயை பார்த்து சிரித்துவிட்டு, இவனைப் பார்த்து மீண்டும் சிரித்துக் கொண்டே, ஒன்றும் இல்லை என்றனர்.

டேய் என்று சில கெட்ட வார்த்தைகளை விட்டுப் பார்த்தான்...ஒருவரும் சொல்லவில்லை...அதற்குள் ஆசிரியர் வந்து விட...பாடத்திலே, மணம் ஈடுபாடுக் காட்டவே இல்லை. அவனின், உளவுப்பிரிவு வகையறாவான, இட்லியயை..(பெயர்க் காரணம் சுவாரசியமானது பின்னர் அறிமுகப்படுத்துகிறேன் ஒவ்வொருவராக), பின் வரிசையில் அமரப் பணித்தான். இட்லி சாதரணமாக செல்ல மாட்டான். ஆனால், இன்று அவனுக்கும், ஆரவம் தாளவில்லை. இசைவு தெரிவித்து, ஆசிரியர் பாரத போது, பின்வரிசைக்குச் சென்றான்.

அவன் போன சில நிமிடங்களிலேயே, அவனும், சிரிக்க ஆரம்பித்தான். ரவிக்கோ, இருப்புக்கொள்ளவில்லை. தானாய் போய் அங்கே அமர தன்மானம் இடம் கொடுக்க வில்லை..போனாலும், சொல்லாமல், ஓட்டவே முயல்வார்கள். அது தன் இமேஜுக்கு இழுக்கு என்று கருதி காத்திருக்கலானான்.
அவனின் தவிப்பை சற்று ரசித்து விட்டு (என்னையை எப்படி எல்லாம்..இட்லின்னு ஓட்டியிருப்பே..என்று சொல்லிக்கொண்டே) , சரி போதும், இதுக்கு மேல் என்றால், நமக்கு பிரச்சனை என்றால் கூட வர ஆள் வேண்டும் என்று, வருங்காலத்தைக் கருதி, அவன், ரவி அருகிலே அமர்ந்தன்.

என்ன என்பது போல் ரவி, இட்லியயைப் பார்த்தான்..(இட்லியின் பேரும் ரவிதான். இன்ஷியல் வேற...).
இட்லி, நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே, சூரியா கைப்பற்றிய தாளுக்கும், மேரி பலவந்தமாகா பிடிங்கியதற்கும், ரவியயைப் பார்த்து சிரித்தற்கும் ஆன காரணத்தை விளக்கினான்.

விவரத்தை கேள்விப் பட்ட ரவிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்னர், மெதுவாக திரும்பி, பெண்கள் வரிசையயைப் பார்த்தான். அதைக் கண்டதும் பெண்கள் வரிசையிலே சல சலப்பு, சிரிப்பு..ஹே...தெரிஞ்சிருச்சிடி.

அவன் மற்ற நன்பர்கள் அவனிடம் என்ன என்னவென்று கேட்க...எதுவும் சொல்லாமல், சிறிதளவு, வெட்கப்பட்டுக் கொண்டே, ஒன்னுமில்லை என்றபடி. பொய்யாக பாடம் கவனிக்க ஆரம்பித்தான்.

அப்படி என்ன தான் இருந்தது அந்த தாளிலே...

அவசரமா...அடுத்த அத்தியாத்திலே சொல்லுறேன்..

- வளரும்..

எதிர்பாராத திருப்பம்!

இதன் முதல் பாகம்: தப்பா நினச்சுக்குவாளோ?

அவள் இப்படி மறுத்துவிடுவாள் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

நான் அப்படியென்ன கேட்டுவிட்டேன்? அவள் வீட்டு பால்கனியில் இருக்கும் பூக்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்றுதானே கேட்டேன்? இதை ஏன் மறுக்க வேண்டும்?

அவள் ஜுராங் பறவைப் பூங்காவில் வேலை பார்க்கிறாளாம்.. பறவைகளுடன் தினமும் பழகும் அவள் பறவைகளைப் போல இனிய மனமுடையவளாக இருப்பாள் என்று நினைத்துத் தானே அவளுடன் பழகினேன்? அவள் இவ்வளவு கல்நெஞ்சக்காரியாக இருப்பாள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அந்த நிகழ்ச்சி நடந்த நாள் முதல் அவளை சந்திப்பதையே முற்றிலும் தவிர்த்துவிட்டேன். அவளுடன் ஜாகிங் போவதையும் நிறுத்திவிட்டேன்.

அண்ணி கூட சமாதானப் படுத்தினாள், "சீனர்களின் செண்டிமெண்ட்டுகள் உனக்குத் தெரியாததா.. பூக்களைப் படம் எடுக்கக் கூடாதென ஏதாவது செண்டிமெண்ட் இருக்குமோ என்னவோ" என்று.. ஆனாலும் என் மனம் சமாதானமடையவில்லை.

அவள் தினமும் காலையில் ஜாகிங் செல்லும்போது என் வீட்டு ஜன்னல் வழியாக நான் வருகிறேனா எனப் பார்ப்பது எனக்குத் தெரிந்தது..ஆனாலும் என் முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

அடுத்த நாள் மாலையில் வீட்டில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் அண்ணி ஒரு கிப்ட் பேக்கை அவள் என்னிடம் கொடுக்கச் சொன்னதாகத் தந்தாள்..

அந்தப் பேக்கில் ஒரு கடிதமும் ஒரு சிடியும் இருந்தது.

டியர் ஸ்வீட் ஹார்ட்,
என் மேல் என்ன கோவம் உனக்கு?

என் வீட்டில் இருக்கும் பூக்கள் அவ்வளவாக நன்றாக இல்லை. அதனால் தான் வேண்டாம் என்று சொன்னேன்.
நேற்று புங்கோல் பார்க்குக்கு சென்ற போது எடுத்த அழகிய மலர்கள் இந்த சிடியில் இருக்கிறது. அவற்றைப் போட்டிக்குப் பயன்படுத்திக்கொள். அத்துடன் பேர்ட்ஸ் பார்க்கில் எடுத்த பறவைகள் படங்களும் இருக்கிறது அதை எப்போழுதாவது "பறவைகள்" என்ற தலைப்பில் போட்டி வந்தால் பயன்படுத்திக்கொள்..

நாளை காலையில் ஜாகிங்கிற்கு உன்னை எதிர்பார்க்கிறேன்...


எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.. இவளைப்போய் தப்பாக நினைத்துவிட்டோமே என்று.. மறுநாள் காலையில் 6 மணிக்கே எழுந்து அவளுடன் ஜாகிங் கிளம்பிவிட்டேன்..

என்னைப் பார்த்ததும் புன்னகைத்தாள்..

சாரி... உன் நல்ல மனசைப் புரிஞ்சுக்காமத் தப்பா நினைச்சுட்டேன்...
இட்ஸ் ஒகே.. ஸ்வீட் ஹார்ட்..


என் மேல கோவம் இல்லையே?
நோ மை சைல்ட்... நீயும் என் மகன் மாதிரிதானே.. நான் எப்படி உன்மேல் கோவப்படுவேன்?

தேங்க்யூ ஆண்டி....

என் அம்மாவின் வயதிருக்கும் அந்தச் சீனப் பெண் என் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்தவாறு ஜாகிங் முடித்து வீட்டுக்குக் கிளம்பினேன். இனிமேல் தினமும் அவளுடன் ஜாகிங் செல்வேன்....

Tuesday, December 4, 2007

(நஒக) : மனைவிக்கிட்டே சொல்லலாமா...?

இதை நான் என் மனைவிக்கிட்டே சொல்லலாமா..? என்று நான் உங்களை கேட்டால் நீங்கள் சொல்லலாம் என்று சாதரணமாக சொல்லிவிட்டு சென்றுவிடுவீர்கள். அதனால், விளையும் பின் விளைவுகளை நான் அன்றோ சந்திக்க வேண்டும்.


பொதுவாக நான் என் மனைவியிடம் எதையும் மறைத்ததில்லை. அலுவலகத்திலே ஒரு சுற்றுலாவிற்குச் சென்றோம். 3 நாள் இன்பச் சுற்றுலாவாகவேயிருந்தது. ஆனால், முடியும் நாளிலே அது நடந்தது. அது நடக்கும் போது நன்றாகவேயிருந்தது. என் மகிழ்ச்சியிலே நன்பர்களும் பங்கெடுத்து அதற்கு பார்ட்டி கூட கேட்டார்கள். இதற்கு கூடவா பார்ட்டி...என்று நான் சமாளித்து வந்துவிட்டேன்.

என் மனைவி தங்கமானவள். அவள் முகத்தைப் பார்த்தாலே, நான் சடெக்கென்று எல்லா உன்மைகளையும் சொல்லிவிடுவேன்..ஆனால், இன்று வழக்கத்தை மாற்றி தான் ஆக வேண்டும்.

என் நெருங்கிய நன்பன், பாலாஜியிடம் என் சங்கடத்தைச் சொன்னேன். அவன் தான் என் உற்ற தோழன் என்று நிருபித்தான்.

இதை சொல்லுவதும் சொல்லாததும் உன் இஷ்டம்.

நான் இது போல் பல முறை சொல்லாமலே தப்பித்து வந்துள்ளேன்.

ஆனால், இன்று தெரியாமல் நாளை தெரிந்து, மறைத்ததற்காக வேறு மாட்ட வேண்டுமா.. என்று நான் குழம்பித் தான் போனேன்.இப்படி நடக்கும் என்று நான் முன்னரே அறிந்திருந்தாலும், நான் இதைப் பற்றி மூச்சு விட்டதில்லை. எந்த திருமணமான ஆனும், இதைப் பற்றி பேச தயங்குவான்.
நான் மட்டும் என்ன விதிவிலக்கா..?

விட்டிற்குச் சென்றேன்....எப்போதும் போல் அவள் என்னை இன்முகத்துடன் வரவேற்றாள்.

இந்த திருமணமான பெண்களுக்குத் தான் என்ன ஒரு மோப்பச் சக்தி...

"என்னங்க..என்ன ஆச்சு..ஏன்..ஒரு மாதிரியா இருக்கீங்க..."...என்று வினவினாள்.

" ஒன்னும் இல்லையே...நான் நல்லாத் தானே இருக்கேன்." என்று சமாளித்தேன்.

அவள் அதை நம்பவில்லை என்று அவள் கண்கள் சொல்லிற்று.. நான்..அவசரமாக குளியலறைக்குள் தஞ்சம் புகுந்தேன்.

அவளிடம் மறைப்பது எனக்குச் சிரமமாகத் தான் இருந்தது. ஏன் என்றால், நடந்ததை நினைத்து எனக்கு மகிழ்சியாகவும் இருந்தகு. அந்த மகிழ்ச்சியயை நான் அவள் இல்லாத போது, கொண்டாடினேன்.

இது நடந்து, மூன்று நாட்கள் கழித்து..

துவைக்கும் இயந்திரத்தில் அவள் துணிகளை துவைக்கப் போட்டுக் கொண்டிருந்தள்..

நான் தொலைக்காட்சியில் ரகசியமாக FTV, பார்த்துக் கொண்டியிருந்தேன்..

ஏதோ உஷ்னக்காற்று என் மிது மோதியது போன்றுயிருந்தது...

திரும்பிப் பார்த்தால் என் ஆசை மனைவி...பத்ரகாளி ஆவதற்கு முந்தைய கட்டத்திலே இருப்பது போன்று எனக்குப் பட்டது..

அவள் கையிலே ஒரு சீட்டு...

இதை நான் எப்படி மறந்தேன்...மாட்டிக் கொண்டா கோழியயைப் போல விழித்தேன்...

நானே சொல்லலாம் என்று தான் இருந்தேன்...

இது என் பெர்ஃபார்மன்ஸ் நன்றாகயிருந்தற்க்காக கொடுக்கப்பட்ட தொகை...அதை சஸ்பென்ஸாக சுற்றுலாவிலே அறிவித்தார்கள்...

தெரிந்தால், நீ உடனே...ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டியிருக்கும் , கல் நெக்லெஸ்க்கு வழி சொல்லிவிடுவாய் என்று எண்ணி மறைத்து விட்டேன்..

இதை வைத்து நான் நம் வீட்டுக் கடனுக்கு ஒரு பெரிய தொகையாக கட்டிவிடலாம் என்று தான் மறைத்துவிட்டேன்...

மனைவி...அதை காதில் வாங்காமல்...பச்சைகலர் கல்லா, சிவப்புக் கல்லா...அது உங்க விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன்..என்று சொல்லிக் கொண்டியிருந்தாள்..