வவா சங்கத்துக்கு.... இரண்டு போட்டிக்காக எழுதப்பட்ட சீரியஸ் திரைகதை, கதை படிச்சுட்டு தற்கொலை பண்ணிக் கொண்டால் நான் பொறுப்பு இல்லை.
இயக்குனர் சாமிமலை : சார், இந்த கதையை படமா எடுத்தால் கண்டிப்பாக நூறுநாள் தான்
தயாரிப்பாளர் : எல்லாரும் இதைத் தான்யா முதலில் சொல்றானுங்க
இயக்குனர் சாமிமலை : இது அப்படி இல்லை சார், மாஸ் ஹீரோவுக்கு படம் பண்ணற கதை இல்லை சார் இது, சேது மாதிரி நிலைச்சு நிக்கிற கதை
தயாரிப்பாளர் : சரி சொல்லய்யா கேட்குறேன்
இயக்குனர் சாமிமலை : முத சீன், அருவியைக் காடுறோம், அப்படியே கீழே இறக்கி அங்கே கதாநாயகி குளிச்சிக்கிட்டு இருக்கிறத காட்டுறோம்... அப்படியே இரண்டு...
தயாரிப்பாளர் : மலையாளப்படம் மாதிரில்லே இருக்கு, ஷகீலா மேடம் இப்ப அந்த மாதிரி படங்களெல்லாம் நடிப்பது இல்லையே
இயக்குனர் சாமிமலை : சார், இது இளமை பொங்கும் படம், கதையை கேளுங்க... அப்படியே இரண்டு புறா அருவி பக்கத்தில் தண்ணீர் குடிப்பதைக் காட்டுறோம்.
தயாரிப்பாளர் : ம் சொல்லு
இயக்குனர் சாமிமலை : அந்த நேரம் பார்த்து அருவியில் தண்ணீர் வேகமாக கொட்டுது
தயாரிப்பாளர் : கதாநாயகி அருவியில் அடிச்சிக்கிட்டு போய்டுவாங்களா ?
இயக்குனர் சாமிமலை : இல்லை சார், அவங்க போட்டு இருக்கிற தாவானி அருவியில் அடிச்சிக்கிட்டு போய்விடுகிறது. செய்வது அறியாது திகச்சி போய் குறுக்கால கையை வச்சு மறச்சிகிறாங்க, இங்கே தான் ஹீரோ எண்டிட்ரி கொடுக்கிறார்.
தயாரிப்பாளர் : ஹீரோ அங்கே எப்படிய்யா திடீர்னு வந்தான்
இயக்குனர் சாமிமலை : போலிஸ் துரத்தி வரும் போது ஹீரோ இந்த பக்கமாக ஓடி வந்து கொண்டிருந்தார். போட்டு இருக்கிற சட்டையை கழட்டி ஹீரோயின் உடம்புல போர்த்திவிட்டு வேகமாக அருவி பாயும் ஆற்றில் குதிச்சிடுறார்.
தயாரிப்பாளர் : அப்பறம்
இயக்குனர் சாமிமலை : தன்னோட மானத்தை காப்பாற்றிய மன்மதன் யார் என்று கதாநாயகி கண்டுபிடிக்க முயலுறாங்க
தயாரிப்பாளர் : இதுதான் கதையா ?
இயக்குனர் சாமிமலை : இது ஒன்லைன் ஸ்டோரி
தயாரிப்பாளர் : ஒன் லைனா ?
இயக்குனர் சாமிமலை : ஆமாம் சார், இது ஒரு பெண், தான் விரும்பும் ஆணை எப்படி அடையாளம் காண்கிறார் என்பதே கதை.
தயாரிப்பாளர் : கடைசியில் கண்டுபிடிச்சாளா ?
இயக்குனர் சாமிமலை : கண்டுபிடிச்சா, ஆனால் அங்கு தான் சஸ்பென்ஸ்
தயாரிப்பாளர் : ம்
இயக்குனர் சாமிமலை : கண்டு பிடிச்சதும் தான் தெரிந்தது அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன மேட்டர்
தயாரிப்பாளர் : ஐயையோ
இயக்குனர் சாமிமலை : அதோட கதை முடிஞ்சுது, மனதை தேற்றிக் கொண்டு அதே அருவிக்கு வந்து மீண்டும் குளிக்கிறாள், அவள் ஒரு தொடர்கதை மாதிரி இருக்கா ? இங்கே அவள் ஒரு தொடர் குளியல்.
தயாரிப்பாளர் : இந்த கதையில் என்ன மெசேஜ்
இயக்குனர் சாமிமலை : அதெல்லாம் இல்லாமல் கதை இருக்குமா ? "கண்டதும் காதல் ஏமாற்றத்தைத் தரும்" என்று சொல்ல வருகிறோம்
தயாரிப்பாளர் : உன்கிட்ட இன்னொன்னு கேட்கனும் னு நெனச்சேன்,
இயக்குனர் சாமிமலை : சொல்லுங்க சார்
தயாரிப்பாளர் : படத்தோட பேரு ஏன் 'இரண்டாவது இரண்டு' ன்னு வச்சே ?
இயக்குனர் சாமிமலை : சார் ஏற்கனவே மாதவன் நடிப்பில் சுந்தர் சி படம் 'இரண்டுன்னு ஒருபடம் இருக்கு, அதனால் தான் இந்த கதைக்கு இந்த பேரு
தயாரிப்பாளர் : கதைக்கு தலைப்பு ஒட்டலையே ?
இயக்குனர் சாமிமலை : இரண்டு பேரோட மனசும் சேர வழியில்லாமல் இரண்டாகிடுது அதுதான் இரண்டாவது இரண்டு - 'இரண்டாவது இரண்டு மனசு" ன்னு புரிஞ்சிகுவாங்க
ஆடியன்ஸ், ஆடியன்ஸ் புத்திசாலி இல்லையா ?
தயாரிப்பாளர் : யோவ், பல தயாரிப்பாளர்கள் சேதுபட கேரக்டராகவே ஏன் மாறிடுறாங்கங்கிறது என்று இப்பதான்யா புரியுது.
பின்குறிப்பு : இது வவாசவுக்கு போட்ட மொக்கை.
Tuesday, April 22, 2008
இரண்டாவது இரண்டு (திரைக்கதை) - வவாச போட்டிக்காக...
Posted by கோவி.கண்ணன் at 8:24 PM
Labels: கோவி.கண்ணன், நகைச்சுவை, மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
விஜய் படம் பாத்தப்பறம் நம்ம மக்கள் முழிக்கற மாதிரி கதை கேட்டவரும் முழிச்ச மாதிரி இருக்குது. நல்லாத்தேன் யோசிச்சிருக்கீங்க
Post a Comment