"டேய் முருகேசா, இந்த இடத்தை வாங்கலாம்டா." என்று முருகேசனின் அம்மா, மீனாட்சி கேட்டாள்.
"இந்த இரண்டு விரலில் ஒன்றைத் தொடு" என்று முருகேசன் கேட்டான்.
"டேய், எது எல்லாம் விளையாடுறதுன்னு ஒரு அளவு இல்லையா." என்று அங்கலாய்த்தாள் மீனாட்சி அம்மாள்.
"அதெல்லாம் தெரியாது..இரண்டிலே ஒன்னைத் தொட்டா பதில். இல்லாட்டி, பதில் இல்லை. அவ்வளவு தான்" என்றுச் சொல்லிவிட்டு, கையயை நீட்டியவாறே, தொலைக்காட்சியில் ஆழ்ந்தான்.
"உன்னைய திருத்தவே முடியாது. சரி போ, இந்தா தொட்டுட்டேன் சொல்லுடா" என்று ஆவலுடன் அவன் முகத்தைப் பார்த்தாள்.
"அம்மா, அந்த இடத்தை வாங்கலாம்மா" என்று முருகேசன் சொல்லவும், அவன் அம்மா முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
இதை அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டியிருந்த எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த மாதிரி முக்கியமான முடிவுகளில் கூடவா, இப்படி விளையாடனும். சரி கேட்டே விடுவோம் என்று..
" ஏண்டா, முக்கியமான விவகாரங்களில் கூட இதை தான் நீ பின்பற்றனும்மா. இதை ஏன் நீ பிடிச்சித் தொங்கிட்டு இருக்கே. " என்றுக் கேட்டேன்.
"இரண்டு விரலில் ஒன்னைத் தொடு, உனக்கு பதில் சொல்லலாமா வேண்டாமா என்று தெரியும் " என்றான்.
எனக்கோ கடுப்பாகிவிட்டது. ஆனாலும், அவனை பள்ளிக்காலம் முதலே அறிந்தவன் என்பதால், பிடிவாதத்தில் அவனை வெற்றி கொள்ள முடியாது என்றுத் தெரியும். சரி போனால் போகிறது என்று அவன் காட்டிய இரண்டில் ஒன்றை கண்ணை மூடிக் கொண்டு தொட்டேன்.
"சரி. வாடா வெளியே போய் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்" என்று சொல்லியப்படியே எழுந்தான்.
இரண்டு பேரும்், இயந்திரவண்டியில் அருகே உள்ள சிம்மக்கல் கோனார் மெஸ்க்கு போனோம்.
இரண்டு, கறி தோசை சொல்லிவிட்டு, நாற்காலியில் அமர்ந்தோம். எனக்கோ ஆவல் தாளமுடியவில்லை.
"ம்..சொல்லுடா" என்று எடுத்துக் கொடுத்தேன்.
"இப்ப சொல்லலாமா, அப்பறம் சொல்லலாமா"..என்று கூறியபடியே, இரண்டு விரலை நீட்டினான் முருகேசன்.
"டேய்..உன் விரலை முறிச்சிப் போட்டா, அதற்கப்பறம் நீட்ட மாட்டே" என்று அவன் கையயைப் பிடித்து முறுக்கினேன்
"டேய் விடுடா, சொல்லுறேண்டா, சொல்லுறேண்டா" என்று அலறினான்...பொய்யாக.
"சொல்லு" என்றுச் சொல்லியபடி, தளர்வாக அவன் விரலை பிடித்தேன். மீண்டும் வம்பு செய்தால், அவன் விரலை உடைப்பதற்காக.
"வேற யார்க்கும் சொல்லக் கூடாது" என்று முன்னறிவிப்புடன் என் காதில் கிசு கிசுத்தான்.
அவன் சொன்னதைக் கேட்டவுடன், அடடே இது ரொம்ப நல்லா இருக்கே என்றுத் தோன்றியது.
சாப்பிட்டு முடித்தோம். பின்னர், முருகேசன் என்னை என் வீட்டில் இறக்கிவிட்டு அவன் வீடு நோக்கிச் சென்றான்.
சரி நான் தூங்கப் போறேன்..அப்பாலே பார்ப்போம்.
என்னாது...அவன் இரண்டு விரல் நீட்டின ரகசியம் சொல்லனும்மா..?
அப்ப இந்த இரண்டு விரலில் ஒன்றைத் தொடுங்க சொல்லுறேன்.
பி.கு :-
இதை வவாசவிற்கு விரல் நீட்டிக் கேட்காமல் அப்படியே எடுத்துக்குவாங்களா..?
Wednesday, April 23, 2008
இரண்டில் ஒன்று......!!!!!!!!!!!!!!!-
Posted by TBCD at 1:57 PM
Labels: TBCD, கதை, சிறுகதை, சிறுகதை மொக்கை, சிறுகதைகள், நகைச்சுவை, வவாச
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
இதுக்குப்பின்னூட்டம் போடலாமா வேண்டாமான்னு நானும் ரெண்டு விரல்ல ஒண்ணு தொட்டுட்டு அதுபடிதான் பின்னூட்டம் போட்டிருக்கேன்
கதை அருமை,
ஒரு பொடி வச்சிருக்கிங்க, இரண்டுல ஒன்னு தொட சொல்லி .. அவங்க விருப்பதையே தேர்வு செய்ததாக சொல்லி வைப்பது உளவியல் ரீதியாக அவங்களுக்கு மகிழ்வை கொடுக்கும் !
:)
இப்படி எல்லாரும் விபரீதமா யோசிச்சி, பின்னுட்டம் போடாம போகிடாதீங்கய்யா...
///
சின்ன அம்மிணி said...
இதுக்குப்பின்னூட்டம் போடலாமா வேண்டாமான்னு நானும் ரெண்டு விரல்ல ஒண்ணு தொட்டுட்டு அதுபடிதான் பின்னூட்டம் போட்டிருக்கேன்
///
பக்கத்திலே வந்துட்டிங்க...
இன்னும் முயற்சி பண்ணுங்க..
//
கோவி.கண்ணன் said...
கதை அருமை,
ஒரு பொடி வச்சிருக்கிங்க, இரண்டுல ஒன்னு தொட சொல்லி .. அவங்க விருப்பதையே தேர்வு செய்ததாக சொல்லி வைப்பது உளவியல் ரீதியாக அவங்களுக்கு மகிழ்வை கொடுக்கும் !
:)
//
:)
:) நல்லாருக்கு..
படம் எங்கருந்து ..கூகிளா.. ?? வரைஞ்சதா .. ரொம்ப அழகா இருக்கு.
கடைசி வரையும் சொல்லாமல் விட்டு கதையைப் படிக்க வைத்ததுக்குப் பாராட்டுக்கள்.
ஏதோ ஒரு பழைய படத்தில் எடுத்ததற்கெல்லாம் பந்தயம் கட்டுபவராக நாயகன் நடித்தது ஞாபகம்.
Post a Comment